பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 173

வரம்பு-வயல்களில் உள்ள வரப்புக்களை ஒருமை பன்மை மயக்கம். அணைவார்-அடைவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். - -

பிறகு உள்ள 14ஆம் பாடலின் கருத்து வருமாறு:

வயலில் பணி புரியும் இழிகுலப் பெண்களாகிய பள்ளி கள் வயலில் வளர்ந்திருக்கும் செங்குவளை மலர்களைப் பிடுங்கித் தங்களுடைய கருமையான கூந்தல்களின்மேல் அணிந்துகொள்வார்கள். தங்களுடைய கூந்தல்களில் அணிந் திருக்கும் செங்குவளை மலர்களில் மொய்க்கும் சிறகுகளைப் பெற்ற வண்டுகளைத் தங்களுடைய அழகிய கைகளாகிய செந்தாமரை மலர்களைக் கொண்டு ஒட்டி அயலில் பறக்கும் வண்டுகளையும் வரும் வண்ணம் அழைப்பார்கள். சந்திர னைப் போல விளங்கும் தங்களுடைய நெற்றிகளில் வேர்வைத் துளிகள் அரும்புகளைப் போலத் துளிக்க, சிறிய புன்னகை முல்லை மலரைப் போல முகிழ்க்க, அந்த வயல்களில் பொங்கி எழுந்து வளர்ந்த தாமரை மலர்களில் உள்ள புதிய தேனைத் தங்களுடைய வாய்களில் பெய்து சோர்வை அடைவார்கள்.” பாடல் வருமாறு: o

செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேற்சிறைவண்டை அங்கைமலர் களைக் கொடுகைத் தயல்வண்டும் 神,, * -- வரவழைப்பாா திங்கள் நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப் பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.”

செங்குவளை-வயல்களில் பணிபுரியும் இழிகுலப் பெண் களாகிய பள்ளிகள் அந்த வயல்களில் வளர்ந்திருக்கும் செங் குவளை மலர்களை; ஒருமை பன்மை மயக்கம். பறித்துபிடுங்கி.கரும்-தங்களுடைய கருமையாக உள்ள.குழல்மேல்கூந்தல்களின்மேல்; ஒருமை பன்மை மயக்கம். அணிவார்சூடிக்கொள்வார்கள் ஒருமை பன்மை மயக்கம். சிறைதங்களுடைய சூந்தல்களில் அணிந்திருக்கும் செங்குவளை