பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 181.

துறை-துறையைப் பெற்ற, ப்:சந்தி, பொய்கையில்மனிதர்கள் ஆக்காத நீர் நிலையில். துன்னும்-இறங்கும். மேதி-எருமை மாடு. படிய-படிந்து முழுக. த்:சந்தி. துதைந்து-உதைத்துத் துள்ளிக்கொண்டு. எழும்-நீருக்கு மேல் எழும். கன்னி-கருப்பத்தை அடையாத வாளைவாளை மீன்கள்: ஒருமை ப்ன்மை மயக்கம். கமுகின்மேல்பாக்குமரத்தின் மேல். பாய்வன-பாய்கின்ற அந்த வாளை மீன்கள். மன்னு-நிலை பெற்று விளங்கும். வான்மிசைஆகாயத்தில் தோன்றும். வான்வில்-இந்திரவில்லை. போலும் -போலத் தோன்றும். ஆல்:ஈற்றசை நிலை. வாளைமீன் கமுகின்மேற் பாய்தல்: நாகிள்ங் கமுகின் வாளை தாவுறும் கோசல நாடுடை. வள்ளல்' என்று கம்பராமாயணத்தில் வருதலைக் காண்க.

அன்னம் ஆடும் துறை: அன்னம் கன்னிப் பேடை, யொ டாடி யணவுபெருந்துறை யாரே.","அன்னம் ஆலும் துறையானும்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரும், அன்னம் ஆடும் முன்துறை.’ (மிதிலைக் காட்சிப் படலம், 23) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து உள்ள 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சோலையில் பழகி அலையும் மகிழ்ச்சியைக் கொண்ட வண்டுகளின் சூட்டம் வாவி நீரில் படிந்து அங்கே மலர்த் திருக்கும் செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், அல்லி மலர், ஆம்பல் மலர்,கருங்குவளை மலர்,குமுத மலர் முதலிய நீர் மலர்களில் நிரம்பியிருக்கும் தேனை அடைந்து அதைக் குடித்துவிட்டு அந்தத் தடாகத்தின்மேல் எழுந்து பறக்க, துள்ளிப் பாயும் கயல்மீன்கள் தாவி அந்தச் சோலையில்

வளர்ந்து நிற்கும் மரங்களிற் பழுத்த பழங்களை அடித்து

உதிரச் செய்யும். பாடல் வருமாறு: