பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - பெரிய புராண விளக்கம்

அளித்தல், இரவலர்களுக்குப் பிச்சை இடுதல், வழிநடப்பவர் களுக்குச் சிற்றுண்டியை வழங்குதல்,குழந்தைகளுக்குச் சோறு அளித்தல், குழந்தைகளைப் பெண்கள் பெறும் வண்ணம் புரிதல், அயலார் குழந்தைகளை வளர்த்து வருதல், குழந்தைகளுக்குப் பசுமாட்டுப் பாலைக் குடிக்கத் தருதல், அநாதைப் பிணங்களை எரியச் செய்வித்தல்,வறுமை அடைந் தவர்களை நிதி வழங்கி மீட்டும் நிலை நிற்கச் செய்தல், வண்ணார்களுக்குத் துணிகளை வெளுத்த கூலியைஅளித்தல், நாவிதர்களுக்கு சுவரம் செய்ததற்குரிய சூலியைக் கொடுத் தல், கன்னிகைகளுக்குத் திருமணம் செய்து வைத்தல், அந்தணச் சிறுவர்களுக்கு உபநயனம் செய்து பிரமசாரிகள் ஆக்குதல், நோய்ாளிகளுக்கு அவர்களுடைய நோய்களைப் போக்குவதற்கு உரிய மருந்துகளை வாங்கி வழங்குதல், கண்ணாடியை அளித்தல், முகூர்த்த ஒலையை வழங்குதல். கண்நோய் பெற்றவர்களுக்கு மருந்துகளை வாங்கி அளித்தல், மக்களின் தலைகளுக்கு எண்ணெய் வழங்குதல், பெண்களின் சிற்றின்பத்தை ஆடவர்கள் துய்க்கும் வண்ணம் செய்தல், மக்களுக்குச் சமையல் செய்த உணவுகளைப் படைத்தல், இறந்து போன மற்றவர்கள் வைத்துச் சென்ற அறங்களைப் பாதுகாத்தல், தண்ணீர்ப் பந்தலை வைத்தல், துறவிகளுக்கு. மடங்களைக் கட்டுவித்து வழங்குதல், தடாகத்தை வெட்டு வித்தல், சோலைகளில் மரங்களை நட்டு வளரச் செய்தல், பசுமாடுகள் தினவு போக்கிக் கொள்ளும் வண்ணம் தறியை நட்டு வைத்தல், காளை மாடுகளை ஒடும்படி விடுதல், கொலைத் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்காக விலை கொடுத்து வேறு உயிர்களை வாங்கி அந்த உயிர்களை உயிர் பிழைக்குமாறு உதவிபுரிதல் என்பவை ஆகும். பேணி-செய்து பாதுகாத்து. ப்:சந்தி. பரவரும்-வாழ்த்துவதற்கு அருமை யாக இருக்கும். கடவுள்-மருத நிலத்துக்கு உரிய தெய்வ மாகிய இந்திரனை; வேந்தன் மேய தீம்புனல் உலகமும்." (அகத்திணை இயல், 5) என்று தெர்ல்காப்பியத்தில் வருவ தைக் காண்க. போற்றி-வாழ்த்தி வணங்கி விட்டு, க்:சந்தி.