பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 19%;

குரவரும்-குருமார்களையும்; ஒருமை ப்ன்மை மயக்கம். விருந்தும்-விருந்தாளிகளையும்; திணை மயக்கம். பண்பின்நற்குணங்களோடு; ஒருமை பன்மை மயக்கம். விரவிய-தம் மோடு சேர்ந்திருக்கின்ற. கிளையும்-சுற்றத்தார்களையும், ஒருமை பன்மை மயக்கம். தாங்கி-உதவிகளைப் புரிந்து பாது காத்து. விளங்கிய-விளக்கத்தை அடைந்துள்ள. குடிகள்குடிமக்கள்; குடும்பங்கள் எனலும் ஆம். ஓங்கி-சிறப்பைப் பெற்று உயர்ச்சியை அடைந்து வாழும். வரை-மலையை. புரை-ஒத்த மாடம்-மாடங்கள் ஒருமை பன்ம்ை மயக்கம். நீடி-உயரமாக விளங்கி. பதிகள்-சிவத்தலங்கள். எங்கும்எல்லாவற்றிலும். மலர்ந்து-மலர்ச்சியை அடைந்து. உளஇருப்பவையாகத் திகழும்; இடைக்குறை. ... . . ."

பின்பு உள்ள 27-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: '

வெட்டிய கரும்புகளை வெல்லங்களாகக் காய்ச்சுகின்ற. ஏர்க் களத்தில் பணிகளைப் புரியும் வேலைக்காரர்கள் கரும்பை அரைக்கும் ஆலையில் கமழும் நறுமணத்தை வீசும். புகையோ, அல்லது விருப்பம் மருவிய பெண்மணிகள் வண்டுகள் மொய்த்து மேலே எழுமாறு அகிற் கட்டைகள்ை இட்ட தூபத்தில் எழும் புகையோ, அல்லது வேள்வித். தூணில் பெருமையையும் நல்ல பெயரையும் பெற்ற யாக சாலை ஒவ்வொன்றிலும் விளங்கி எழுந்த புகையோ, அல்லது ஆகாயத்தில் வரும் கருமையான மேகங்களோ மாடங்களும் சோலைகளும் ஆகிய எந்த இடங்களிலும் சுற்றி விளங்கும்."

பாடல் வருமாறு:

கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்

சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூபவேள்விப் பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய் புகையோ

t . . . . . . . . . . . . . வானின் வரும்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்.’’