பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பெரிய புராண விளக்கம்

எங்கும்-எவ்விடத்திலும் வளர்ந்து நிற்கும். தாள் இரும்கருமையான அடியைப் பெற்ற போந்து-பனமரமும். சந்து-சந்தன மரமும். தண்-குளிர்ச்சியை உடைய மலர்மலர்கள் மலரும்; ஒருமை பன்மை மயக்கம். நாகம்-சுர புன்னை மரமும். எங்கும்-எந்த இடத்திலும் காணப்படும். நீள்-நீளமான, இலை இலைகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். வஞ்சிவஞ்சி மரமும். காஞ்சி-காஞ்சி மரமும். நிறை-தேன் நிறைந்த, மலர்-மலர்கள் மலர்ந்த: ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கேர்ங்கம்-கோங்கிலவ. மரமும். எங்கும்.எந்த இடத்திலும் சிறந்து விளங்கும். அடுத்து உள்ள 29-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

எந்த இடத்திலும் மாமரமும், பாதிரி மரங்களும் வளர்ந்து நிற்கும்; வேறு இடம் எங்கும் சுரபுன்னை மரமும் புலிநகக் கொன்றை மரமும் வளர்ச்சியைப்பெற்று விளங்கும்; மற்ற இடங்கள் எங்கனும் சாதி மல்லிகைக் கொடியும், சிறு செண்பகச் செடிகளும் வளர்ந்து விளங்கும்; வேறு எந்த இடத்திலும் குளிர்ச்சியையும், முற்றாத இலைகளையும் பெற்ற மயிற்கொன்றை மரம் தோற்றம் அளிக்கும்; வேறாக உள்ள் எந்த இடங்களிலும் குருக்கத்திக் கொடியும், சரள தேவதார மர்மும் ஓங்கி வளர்ந்து விள்ங்கும்; மற்ற எந்த இடங்களிலும் மகிழ மரமும் சண்பக் மரங்களும்காணப்படும்: வேறு உள்ள இடங்களில் ம்லர் ம்லர்ந்த தாழை மரம் இருக், கும்; மற்ற இட்ங்களில் கமுக மரமும், புன்னாக மர்மும் வளர்ந்து நிற்கும்.' பாடல் வருமாறு:

சூதபாடலங்கள் எங்கும், சூழ்வழை ஞாழல் எங்கும்;

சாதிமா லதிகள் எங்கும்; தண்தளிர் நறவம் எங்கும்; மாதவி சரளம் எங்கும்; வகுள்சண் பகங்கள் எங்கும்; போதவிழ் கைதை எங்கும், பூகபுன் னாகம் எங்கும்.” சூத-மாமரமும். பாடலங்கள்-பாதிரி மரங்களும்.எங்கும்எத்த இடங்களிலும் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை