பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 195

மயக்கம். சூழ்-சுற்றியுள்ள இடங்களில் ஒருமை பன்மை மயக்கம். வழை-சுரபுன்னை மரமும், ஞாழல்-புலிநகக் கொன்றை மரமும். எங்கும்.எந்த இடங்களிலும் வளர்ந்து விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம். சாதி-சாதிமல்லிகைக் கொடியும். மாலதிகள்-சிறு செண்பகச் செடிகளும். எங் கும்-எல்லா இடத்திலும் காட்சி அளிக்கும். தண்-குளிர்ச்சி யைக் கொண்ட தளிர்-முற்றாத இலைகளைப் பெற்றி ஒருமை பன்மை மயக்கம், நறவம்-மயிற்கொன்றை மரமும், எங்கும்-எவ்விடத்திலும் தோற்றம் அளிக்கும். மாதவி, குருக்கத்திக் கொடியும். சரளம்-சரள, தேவதார மரமும், எங்கும்-எங்கணும் விளங்கும். வகுள-மகிழ மரமும். சண்ப கங்கள்-சண்பக் மரங்களும். எங்கும்-எந்த இடத்திலும் தோற்றம் அளிக்கும். போது-பேரரும்பு. அவிழ்-மலர்ாக் மலரும். கைதை தாழை மரம். எங்கும்-எந்தஇடத்திலும் வளர்ந்து நிற்கும். பூக-கமுக மரமும். புன்னாகம்-புன்னாக் மர்மும். எங்கும்-எந்த இடத்திலும் காணப்படும்.

அடுத்து உள்ள 30-ஆம் பாடலின் கருத்து வருமாறு: எந்த இடங்களிலும் அந்தணச் சிறுவர்களுக்கு உபநய னம் செய்தல், குழந்தைகளுக்குக் குடுமிகளை வைத்தல், அவர்களுக்கு அன்ன்ப் பிராசனச் சடங்கை நடத்தல் முதலிய மங்கல காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்; ஆடவ. ருக்கும் பெண்மணிகளுக்கும் திருமணங்களை நடத்தும்போது உண்டாகும் ஆரவாரம் எங்கும் கேட்கும்; எந்த இடத்திலும் தாமரை மலர்களைப் போன்ற பெண்மணிகளினுடைய அழகிய முகங்கள் தோற்றப் பொலிவோடு திகழும்; பண் களைப் போல உள்ள மழலைச் சொற்களைப் பெண்மணிகள் எந்த இடத்திலும் பேசிக்கொண்டிருப்பார்கள்; பிரகாசம் பொங்கி எழும் சிலம்பு, பொன்வளைகள், ஒட்டியாணம், சுட்டி, புல்லாக்கு,காசுமாலை, கைக்காப்பு, வங்கி, மோதி ரம், பீலி முதலிய அணிகலன்கள் எந்த இடத்திலும் ஒளி விட்டுக்கொண்டிருக்கும்; எந்த் இட்த்திலும் புதிய ம்லர்