பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 - -- பெரிய புராண. விளக்கம்

கள்ை மாலையாகக் கட்டித் தொங்கவிட்ட பந்தல்கள் தோற்றம் அளிக்கும்; சிவந்த நிறத்தைக் கொண்ட கயல் மீன்கள் வயல்களில் எல்லா இடங்களிலும் துள்ளிக் குதிக்கும், எந்த இடமும் திருமகள் நிலையாகத் தங்கும் வாசத் தல மாகச் செல்வத்தைப் பெற்றுத் திகழும். பாடல் வருமாறு:

"மங்கல வினைகள் எங்கும், மணம்செய்கம் புலைகள் ● ,希

எங்கும; பங்கய வதனம் எங்கும்; பண்களின் மழலை எங்கும்; - பொங்கொளிக் கலன்கள் எங்கும்; புதுமலர்ப் பந்தர் எங்கும்; செங்கயல் பழனம் எங்கும்; திருமகள் உறையுள் எங்கும்.'

மங்கல வினைகள்-அந்தணச் சிறுவர்களுக்கு உபநயனம் செய்தல், குழந்தைகளுக்குக் குடுமிகளை வைத்தல், அவர் களுக்கு அன்னப்பிராசனச் சடங்கை நடத்தல், ருதுவான பெண்களை நீராட்டுவித்தல், பும்ஸவன சீமந்த முகூர்த் தத்தை நடத்துதல், சாந்தி முகூர்த்தத்தை நடத்தல், கிருகப்பிரவேசம் செய்தல் முதலிய மங்கல காரியங்கள், எங்கும்.எந்த இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்: ஒருமை பன்மை மயக்கம். மணம் செய்-ஆடவருக்கும் கன்னி கைக்கும் திருமணம் புரியும்போது எழும். கம்பலைகள்-ஆர வார ஒலிகள். எங்கும்-எந்த இடத்திலும் கேட்கும். பங் கயடச்ெந்தாமரை மலரைப்போன்ற. வதனம்-பெண்களின் முகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எல்லா இடத் திலும் தோற்றத்தை அளிக்கும். பண்களின்-பண்களைப் போன்ற. மழலை-பெண்மணிகள்பேசும் மழலைச் சொற்கள்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடத்திலும் காது களில் விழும். பொங்கு-பொங்கி எழும். ஒளி-பிரகாசத்தை வீசும். க்: சந்தி. கலன்கள்-சிலம்பு, பொன்வளைகள், கண்ணாடி வளையல்கள்,கங்கணங்கள்,ஒட்டியாணம், சுட்டி, புல்லாக்கு, காசுமாலை, கைக்காப்புக்கள், வங்கி, மோதிரங் கள்,பீலி,மாட்டல், ஜிமிக்கிகள் முதலியஆபரணங்கள்.எங்கும். எவ்விடத்திலும் திகழும். புது-புதிய, மலர்-மலர்களைக்