பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிற்ப்பு 199 உபநயனம், திருமணம், பும்ஸ்வன சீமந்த முகூர்த்தம் , சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலிய சடங்குகளும்: ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எவ்விடங்களிலும் நடந்துகொண்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். இன்ப மும்-சிற்றின்பத்தை நுகர்பவர்களும்; திணை மயக்கம். மகிழ்வும்-பெருமகிழ்ச்சியை அடைபவர்களும்; திணை மயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும் காட்சி அளிப்பார் கள்: ஒருமை பன்மை மயக்கம். யோகமும்-அஷ்டாங்க யோகத்தைப் புரிபவர்களும்; திணை மயக்கம். தவமும்தவத்தை ஆற்றுபவர்களும்; திணை மயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும் தோற்றம் அளிப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஊசலும்-ஊஞ்சல்களில் ஆடுபவர்களும்; தினை மயக்கம். ஊசல்: ஒருமை பன்மை மயக்கம். மறுகும்நான்கு வருணத்தவர்கள் வாழும் விதிகளும்:ஒருமை பன்மை மயக்கம். அவர்கள் அரசர்கள், வணிகர்கள், வேளாளர்கள், அந்தணர்கள் என்பவர்கள். எங்கும்-எந்த இடங்களிலும் சிறப்புற்றுத் திகழும்; ஒருமை பன்மை மயக்கம். போகமும்மாதர்களோடு ஆடவர்கள் துய்க்கும் போகமும். பொலிவும்பெண்மணிகள் ஆடவர்கள் ஆகியவர்களின் தோற்றப் பொலி வும். எங்கும்-எந்த இடங்களிலும் தோன்றும்; ஒருமை பன்மை மயக்கம். புண்ணிய-புண்ணியச் செயல்களைப் புரியும்; ஒரும்ை பன்மை மயக்கம். முனிவர்-முனிவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எங்கும்.எந்த இடங்களிலும் வீற்றிருப்பார்கள்; ஒருமை பன்ம்ை மயக்கம்.

அடுத்து உள்ள 32-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பலவகையான் பண்களை எழுப்பும் குறிஞ்சி நிலத்துக் குரிய யாழ்ை மீட்டி வாசிப்பவர்கள் எந்த் இடங்களிலும் அதை வாசித்துக் கொண்டிருப்பார்கள் பெண்மணிகள் தங் க்ள் பாதங்களில் எல்லா வீடுகளிலும் செம்பஞ்சுக் குழம்பைப் பூசிக்கொண்டு விளங்குவார்க்ள் வண்டுகள் ரீங்காரத்தை முர்லும் வண்ண்ம் மலர்களைச் சூடிக் கொண்ட் கூந்தல்