பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 211. என்று மாணிக்க

3.

பொன்னை வென்றதோர் புரிசடை முடி’ வாசகரும் பாடி யருளியவற்றைக் காண்க. -

அடுத்து வரும் 2-ஆம் பாடலின் கருத்து வருமாறு: இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம்,அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களையும் வேத பாரங்கதர் கள் ஒதும் கானமும், வீணையை வாசிப்பவர் அதை மீட்டிப் பாடும் இனிய நாதமும், ஒளி படைத்த திருமேனிகளைக் கொண்ட தேவர்கள் வன்மீகநாதரைத் தோத்திரம் புரியும் பாடல்களின் இனிய ஒலியும், விருப்பம் மருவிய பெண்மணி கள் நடனம் ஆடும்போது தட்டி முழக்கும் அழகிய மத்தளத் தின் சத்தமும், சங்கீத வித்துவான்கள் பாடும் இசைப் பாடல்களின் இனிய ஒலியுமாக நிறைந்து அந்தத் திருவாரூர் என்னும் நகரத்தில் கிளர்ச்சியைப் பெற்று விளங்கின." பாடல் மருமாறு: -

வேத ஓசையும் வீணையின் ஒசையும் சோதி வானவர் தோத்திர ஓசையும் மாதர் ஆடல் மணிமுழவோசையும் கீத ஓசையு மாய்க்கிளர் வுற்றவே : வேத - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் வேத் பாரங்கதர்கள் ஒதும்; ஒருமை பன்மை மயக்கம். ஒசையும். கானமும். வீணையின்-வீணையை வாசிப்பவர் அந்த இசைக் கருவியை மீட்டிப்பாடும்; திணை மயக்கம். ஓசையும்இனிய நாதமும். சோதி-ஒளியைப் பெற்ற திருமேனிகளைக் கொண்ட ஆகுபெயர். வானவர்-தேவலோகத்தில் வாழும் தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தோத்திர-வன்மீக நாதரைத் தோத்திரம் புரியும் பாடல்களின்; ஒருமை பன்மை மயக்கம். ஒசையும்-இனிய ஒலியும். மாதர்-விருப்பம் மருவிய பெண்மணிகள், ஒருமை பன்மை மயக்கம். ஆடல்நடனம் ஆடும்போது தட்டி முழக்கும். மணி-அழகிய,முழவு,