பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

திருநகரச் சிறப்பு 22

அடுத்து உள்ள 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

“பூ மடந்தைக்கு அழகு நிறைந்த செல்வம் நெடுநாளாக ப் பெற்று விளங்கும் நெற்றியில் இட்டுக்கொண்ட திலகத்தைப் போல விளங்குவது சோழ மன்னர்கள் இராசதானி நகர மாகக் கொண்டு ஆட்சிபுரிந்த தலம்; செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்குச் செந்தாமரை மலரைப்போல மலர்ச்சியைப் பெற்றதாகக் கணக்கு இல்லாத சீர்த்தியைக் கொண்ட திருவாரூர் சிறப்புற்று விளங்கும். பாடல்

வருமாறு:

'நிலம கட்கழ கார்திரு நீன்றுதல்

திலகம் ஒப்புது செம்பியர் வாழ்பதி மலர்ம கட்குவண் தாமரை போல் மலர்க் தலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.’

நிலமகட்கு-பூமடந்தைக்கு. ஆழகு ஆர்-எழில் நிறைந்த. இரு-செல்வத்தைப் போல. நீள் - உள்ள அகலமான, றுதல்நெற்றியில் இட்டுக்கொண்ட திலகம்- திலகத்தை ஒப்பதுபோன்று விளங்குவது. செம்பியர்-சிபிச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் பிறந்த சோழ மன்னர்கள்; ஒருமை பன்மை மயக்கம். புறவின் அல்லல் சொல்லிய கறையடி, யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக், கோனிறை துலா அம். புக்கோன் மருக”. (புறநானூறு 39 -3), புள்ளுறு புன்கண் தீர்த்த வென்லேற், சினங்கெழு தானைச் செம்பி யன் மருக.’ (புறநானூறு, 37 5-6) என வருபவற்றைக் காண்க. வாழ்-ஆட்சிபுரிந்து வாழும். பதி-இராசதானி நகரம். மலர்மகட்கு-செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு. வண்-வளப்பத்தைக் கொண்ட தாமரைசெந்தாமரை மலரை போல்-போல. மலர்ந்து-மலர்ச்சியை அடைந்து. அலகு-கணக்கு இல்-இல்லாத கடைக்குறை. சீர்-சீர்த்தியைப்பெற்ற த்: சந்தி. திருவாரூர்-திருவாரூர் என்ற நகரம். விளங்கும்-சிறப்புற்று விளங்கும். ஆல்: