பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 227

கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திடச் சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச் செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப் பெற்ற திேயும் தன்பெயர் ஆக்கினான்.'

கொற்ற-மன்னர்களுக்கு உரிய ஆழி-ஆக்ஞா சக்கரம். குவலயம்-உலகம் முழுவதையும். சூழ்ந்திட-குழும் வண்ண மும்; சூழ்ந்து ஆட்சி புரியும் வண்ணமும். ச்: சந்தி. சுற்றுசோழநாட்டைச் சுற்றிலும் உள்ள குறுநிலங்களை; ஒருமை பன்மை மயக்கம். மன்னர்-குறுநில மன்னர்கள்; ஒருமை பன்மை மயக்கம். திறை-கப்பத்தைச் செலுத்தும் பொருட்டு, கடை-அரண்மனையின் வாசலில். சூழ்ந்திட-சுற்றிக் காத்து நிற்கவும். ச்: சந்தி. செற்றம்-தன்னுடைய பகை LDರ್ಣಿ னர்களுடைய பகைமையை. நீக்கிய-போர் புரிந்து வென்று போக்கிவிட்ட. செம்மையின்-சிறந்த பண்புகளால்; ஒருமை பன்மை மயக்கம். மெய்-உண்மையான பழைய. ம்:சந்தி. மனு-மனுவேந்தனால் பெற்ற-இயற்றப்பெற்ற, நீதியும்நீதி சாத்திரத்தில் விதிக்கப் பெற்ற நீதிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். தன்-தன்னுடைய பெயர்-மனுநீதிச் சோழன் என்ற பெயரையும். ஆக்கினான்-தன்னுடையவை. யாக ஆக்கிக்கொண்டான். -

அடுத்து வரும் 16-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அழகு பொங்கி எழுகின்றதும் பெருமையைப் பெற்ற தும் வேதங்களின் வடிவமானதும் ஆகிய பாம்புப்புற்றைத் தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட வன்மீக நாத்ரும், எல்லா இடங்களிலும் வியாபித்தவரும் ஆகி அமர்ந்தவ ருடைய பூசைக்கு அவருடைய ஆலயமாகிய அந்த இடத்தில் வேண்டியவற்றிற்கு உரிய கட்டளைகளை ஆராய்ந்து பரிசுத்தமாகிய சைவ ஆகமம் விதித்த முறையின்படியே பார்த்து அமைத்திருப்பவன் மனுநீதிச் சோழ மன்னன்.

பாடல் வருமாறு: