பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பெரிய புராண விளக்கம்

  • பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்

சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் கூடலன் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண்

டெல்லி, ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.” இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரம், சீகாமரம், குறிஞ்சி என்னும் பண்கள் அமைந்த திருப்பதிகங்களையும், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத் தாண்டகம் என்பவை அடங்கிய திருப்பதிகங்களையும் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியிருக்கிறார். அவற்றுள் ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

'பிறப்போ டிறப்பென்றும் இல்லாதான்காண்;

பெண்ணுருவோ டாணுருவம் ஆயி னான்காண்:

மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்; வானவரும் அறியாத நெறிதங் தான்காண்;

நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல

கறுஞ்சாந்தம் கொண்டேத்தி நாளும் வானோர்

சிறப்பாடு பூசிக்கும் திருவாரூரில்

திருமூலட் டானத்தெம் செல்வன் தானே.

இந்தத் தலத்தைப் பற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார் ஆறு திருப்பதிகங்களைப் பாடியருளியிருக்கிறார். அவற்றுள் ஒரு திருப்பதிகத்தில் உள்ள ஒரு பாசுரம் வருமாறு:

'இறைகளோ டிசைந்த இன்பம்

இன்புத்தோ டிசைந்த வாழ்வு பறைகிழித் தனைய போர்வை

பற்றியான் நோக்கி னேற்குத் திறைகொணர்ந் தீண்டித் தேவர் - செம்பொனும் மணியும் தூவி

அறைகழல் இறைஞ்சும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.”