பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பெரிய புராண விளக்கம்

5.37.” என்று திவ்வியப் பிரபந்தத்தில் வருவதைக் காண்க. அரிக்குருளை அன்னான்: 'சிறுவனோர் சிங்க ஏற்றை சீவக சாமி என்பான். (சீவக சிந்தாமணி, 565), * ஏறுார்ந்தான் ஏறே,’ (திருமுருகாற்றுப்படை, இறுதி வெண்பா.) என வருவனவற்றைக் காண்க.

பிறகு உள்ள 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

மனுநீதிச் சோழ மன்னன் தவத்தைப் புரிந்து அதன் பயனாக அருமையாகப் பெற்ற ஒப்பற்ற இளமையையுடைய புதல்வனாகிய இளைஞன் ஒவ்வொரு நாளும் சிவபெருமானை வணங்கி முயற்சிசெய்து அடைவதற்குரியவை ஆக இருக்கும் தெய்வத் தன்மையைக் கொண்ட பல கலைகளாக உள்ள அறுபத்து நான்கையும் திருத்தம் அமையுமாறு கற்று, வேக மாகத் தாவும் குதிரை ஏற்றம், யானை ஏற்றம், தேரை ஒட்டுதல்,வாள், வில், ஈட்டி, அம்பு, முதலிய பல வகையான ஆயுதங்களைப் பிரயோகம் புரியும் வேலைகளை உரிய ஆசிரி யர்களிடம் கற்றுத் தேர்ச்சியைப் பெற்று, இந்தப் பிறப்பை எடுத்ததும் நல்ல பாக்கியமே என்று கூறும் வண்ணம் அமை யும் நல்ல குணங்களில் மிகுதியான சிறப்பைப் பெற்று விளங் கினான். பாடல் வருமாறு:

'தவம்முயன் றரிதிற் பெற்ற தனிஇளங் குமரன் நாளும்

சிவம்முயன்றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதிக் கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்றுப் பவமுயன் றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.”

தவம்-தவத்தை. முயன்று-மனுந்திச் சோழன் இடை விடாமல் செய்து. அரிதில்-அருமையாக. பெற்ற-புதல்வ் -னாக அடைந்த தனி-ஒப்பற்ற இளம்-இளமைப் பரு வத்தைக் கொண்ட குமரன்-இளைஞன். நாளும்-ஒவ் வொரு நாளும். சிவம்-சிவபெருமானை. முயன்று-இடை விடாமல் வணங்கி. அடையும்-அடைவதற்கு உரியவையாக இருக்கும். தெய்வ-தெய்வத் தன்மையை உடைய. க்சந்தி.