பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பெரிய புராண விளக்கம்

அடுத்து உள்ள 19-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்தக் குமரன் அவ்வாறு கணக்கு இல்லாத பழைய கலைகளைக் கற்று நிறைவேற்றித் தன்னை அருமையாகப் பெற்றவராகிய தந்தையார் மிகுதியாகத் தம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியையும் வாத்ஸல்யத்தையும் அடை யும் வண்ணம் சிறப்புற்று ஓங்கியுள்ள நல்ல குணங்க ளோடு நெடுங்காலமாக வளர்ந்து இளவரசன் என்று சொல்லும் பான்மையை அடைவதற்குச் சமீபத்தில் உள்ளவ னாகி வளரும் பால சூரியனைப் போல விளங்கி வாழ்ந்து வருங்காலத்தில், ஒருநாள் அந்த இளமையைப் பெற்ற இளைஞன். பாடல் வருமாறு: . .

அளவில்தொல் கலைகள் முற்றி அரும்பெறல் தந்தை மிக்க உளம்மகிழ் காதல் கூர

ஓங்கிய குணத்தால் நீடி இளவர சென்னும் தன்மை

எய்துதற் கணிய னாகி வளரிளம் பரிதி போன்று

வாழும்நாள் ஒருநாள் மைந்தன்.'

இந்தப் பாடல் குளகம். அளவு-அந்தக் குமரன் அவ் வாறு கணக்கு. இல்-இல்லாத கடைக்குறை. தொல்பழமையான கலைகள்-கலைகளை. முற்றி-கற்று நிறை வேற்றி. அரும்பெறல்-தன்னை அருமையாகப் பெற்றவ ராகிய, திணை மயக்கம். தந்தை-தந்தையார்: ஒருமை பன்மை மயக்கம், தந்தையார்-மனுநீதிச் சோழ மன்னராகிய தந்தையார்.உளம்-தம்முடைய உள்ளத்தில்:இடைக்குறை, மகிழ்-மகிழ்ச்சியையும்; முதல்நிலைத் தொழிற்பெயர். காதல். வாத்ஸல்யத்தையும். கூர-மிகுதியாக அடையும் வண்ண மும். ஓங்கிய-சிறப்புற்று ஓங்கியுள்ள. குணத்தால்-நல்ல குணங்களோடு; ஒருமை பன்மை மயக்கம்: உருபு மயக்கம். நீடி-நெடுங்காலம் வளர்ந்து, இளவரசு-இளவரசன்: தின்ை