பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பெரிய புராண விளக்கம்

மனுநீதிச் சோழ வேந்தனுடைய நடுக்கம் இல்லாத உள்ளத் தில் இருக்கும் உண்மையினுடைய தன்மையைச் சோதித் தாற்போல மனிதர்கள் தான் வருவதைப் பாராதவாறு ஒர் அழகிய நல்ல பசுமாட்டினுடைய ஈன்றணிமையான கன்றுக் குட்டி துள்ளிக்கொண்டு அந்தத் தெருவில் வந்தது. பாடல் வருமாறு: -

தனிப்பெருங் தருமங் தானோர்

தயாஇன்றித் தானை மன்னன் பனிப்பில்சிங் தையினில் உண்மைப் பான்மைசோ தித்தால் என்ன மனித்தர்தன் வரவு காணா

வண்ணமோர் வண்ணம் கல்ஆன் புனிற்றிளங் கன்று துள்ளிப் - போந்ததம் மறுகி னுடே." தனி-ஒப்பற்ற, ப்:சந்தி. பெரும்-பெருமையைப் பெற்றிருக் கும். தருமம்தான்-தருமதேவதைதான். ஓர்-சிறிதளவும். தயா-தயை. இன்றி.-இல்லாமல், த்:சந்தி. தானைசேனையைப் பெற்ற. மன்னன்-மனுநீதிச் சோழவேந்த னுடைய. பனிப்பு-நடுக்கம். இல-இல்லாத கடைக்குறை. சிந்தையினில்-உள்ளத்தில் உள்ள. -6ಣL-GuduTಣ್ಣ ப்:சந்தி. பான்மை-தன்மையை. சோதித்தால் என்னி சோதனை செய்தாற் போல. மனித்தர்-மனிதர்கள்: *மனிதர்' என்பது மனித்தர் என எதுகை நோக்கி வந்தது, மனித்தப் பிறவியும்' என்பதைப்போல. தன்-தன்னு ಹLLು. வரவு-வருகையை. காணாவண்ணம்-பாராதவாறு. ஓர் வண்ணம்-ஒரு வகையாக நல்-நல்ல. ஆன்-பசுமாட்டி லுடைய. புனிறு-ஈன்றணிமையாகிய, இளம்-இளம் பருவத்தை உடையதாக இருக்கும். கன்று-கன்றுக்குட்டி. துள்ளி-துள்ளிக்கொண்டு. ப்:சந்தி. அம் மறுகினுாடு-இள வரசன் தேரில் ஏறிக்கொண்டு போகும் அந்தத் தெருவில். ஏ. ஈற்றசைநிலை. போந்தது-ஓடி வந்தது. பரமேசுவரனே