பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்

உன்னுடைய கொற்ற வாயில்-வெற்றியை உடைய அரண் மனை வாசலில். தூங்கிய-கட்டித் தொங்கிய. மணியை. ஆராய்ச்சி மணியை. க்:சந்தி. கோட்டால்-தன்னுடைய இரண்டு கொம்புகளாலும், ஒருமை பன்மை மயக்கம். துளக் கியது-அசைத்து அடித்தது. என்று-என. சொன்னார்-அர சனிடம் கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். அடுத்து வரும் 30-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: மனுநீதிச் சோழவேந்தன் அரண்மனை வாயில் காவலர் கள் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டு, வருத்தத்தை அடைந்திருந்த பசு மாட்டைப் பார்த்து, ' இதற்கு என்ன துன்பம் வந்தது?’ என்று கூறித் தன்னுடைய மந்திரிமார் களை இகழ்வாக அமைந்த பார்வையோடு பார்க்க, முன்பு உண்டாகி நடந்தவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டி ருப்பவனும், நல்ல நூல்களைக் கேட்ட கேள்வியில் பழுத்துள் ளவனும், பழைய நியாய வழிகளை அறிந்து கொண்டவனு மாகிய ஒரு மந்திரி மனுநீதிச் சோழனுடைய இரண்டு திருவடிகளையும் வணங்கிவிட்டுக் கூறலானான். பாடல் வருமாறு:

"மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி,

'என்.இதற் குற்ற தென்பான் அமைச்சரை இகழ்ந்து

3 if a : يا முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த

- - கேள்வித் தொன்னெறி அமைச்சன் மன்னன் தாளினை தொழுது சொல்வான். மன்னவன்-மனுநீதிச் சோழ வேந்தன். அதனை-தன் னுடைய அரண்மனை வாயில் காவலர்கள் கூறிய அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேளா-கேட்டு. வருந்திய-வருத்தத்தை அடைந்திருந்த.பசுவை-பசுமாட்டை. நோக்கி-பார்த்துவிட்டு. என்-என்ன. இதற்கு-இந்தப் பசு மாட்டுக்கு உற்றது-உண்டான துன்பம். என்பான்-என்று