பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 255.

கேட்பவனாகி; முற்றெச்சம். அமைச்சரை-தன்னுடைய மந்திரிகளை ஒருமை பன்மை மயக்கம். இகழ்ந்து-இகழ் வாக அமைந்து இருக்கும். நோக்க-பார்வையோடு பார்க்க.. முன்-முன்னால், உற-உண்டாகிய. நிகழ்ந்த-நடந்தவை. எல்லாம்-எல்லாவற்றையும். அறிந்துளான்-.ெ த ரித் து கொண்டிருப்பவனும். உளான். இடைக்குறை. முதிர்ந்தமுதுமையை அடைந்தவனும்; வினையாலணையும் பெயர். கேள்வி.நல்ல நூல்களைத் தக்கார் வாயிலாய்க் கேட்ட கேள்வியைப் பெற்றவனும்; திணைமயக்கம், த்:சந்தி. தொல்-பழங்காலத்திலிருந்து வரும். நெறி-நீதிமுறைகளை அறிந்தவனும் திணைமயக்கம். நெறி:ஒருமை பன்மை மயக்கம். அமைச்சன்-ஆகிய ஒரு மந்திரி. மன்னன்-மனு நீதிச் சோழ வேந்தனுடைய. தாளிணை-இரண்டு திருவடி களையும்; தாள்: ஒருமை பன்மை மயக்கம். தொழுதுவணங்கிவிட்டு. சொல்லான். பின்வருமாறு கூறுவானானான். அடுத்து உள்ள 31-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சோழ மாமன்னனே, உன்னுடைய மகன் அந்த விதி: யில் அடிக்கும் மணிகளைக் கட்டிய ஒர் உயரமான தேரின் மேல் ஏறிக்கொண்டு கணக்கு இல்லாத தேர்களும், Ι-13δ) 1வீரர்களும் தன்னைச் சுற்றிவர, அரசர்கள் போகும் விதியில் போகும் சமயத்தில், இளமைப் பருவத்தைப் பெற்ற பசு மாட்டினுடைய கன்றுக்குட்டி வந்து அந்தத் தேரின் சக்கரங். களினிடையே நுழைந்து இறந்து விட்டது; ஆகையினால் தளர்ச்சியை அடையும் இந்தத் தாய்ப் பசுமாடு வந்து இத் தகைய செயலை உண்டாக்கியது.’’ என்று அந்த முதிய அமைச்சன் கூறினான். பாடல் வருமாறு: -

'வளவ.கின் புதல்வன் ஆங்கோர் மணி கடும் தேர்மேல் ஏறி: அளவில்தேர்த் தானை சூழ அரசுலாம் தெருவிற் போங்கால் இளையஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந் திறந்த தாகத்

தளர்வுறும் இத்தாய் வந்து வினைத்ததித் தன்மை

என்றான்.'