பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 269.

சிந்தை செயாது-சிறிதளவேனும் சிந்தனை செய்யாமல், செயாது: இடைக்குறை. உரைக்கின்றீர்-வார்த்தைகளைக் கூறுகிறீர்கள்; ஒருமை பன்மை மயக்கம். எவ்வுலகில்-எந்த உலகத்தில். எப்பெற்றம்-எந்தப் பசும்ாடு. இப்பெற்றித்துஇத்தகையது. ஆம்-ஆகும். இடரால்-துன்பத்தால். வெவ்வுயிர்த்து-வெப்பமாகப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு. க்:சந்தி. கதறி-கதறி அழுது. மணி-ஆராய்ச்சி மணியை. எறிந்து-அடித்து விட்டு. விழுந்தது-தரையில் விழுந்தது. விளம்பீர்-அதைக் கூறுங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அடுத்து வரும் 41-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வாழ்த்துக்களைக் கூறி இந்திரன், திருமால், பிரம தேவன் முதலிய தேவர்கள் புகழ்களைக் கூறி வணங்க அமர்ந்திருந்த பெருமானாராகிய தியாகராஜர் விரும்பி எழுந்தருளித் தங்கியிருக்கும் திருவாரூரில் பிறப்பைப் பெற்ற ஓர் உயிரை இவன் கொலை செய்து விட்டான். ஆகையினால் தீர்மானம் செய்த என் கருத்து யான் துயரத்தைப் பொறுத்துக் கொள்ளலும், அந்த என் புதல் வனைக் கொலை செய்தலும் ஆகிய அதுவே ஆகும் என்று: நீங்கள் எண்ணுங்கள். பாடல் வருமாறு:

'போற்றிசைத்துப் புரந்தரன்மால்

அயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச வீற்றிருந்த பெருமானார் - மே யுறை திருவாரூர்த் தோற்றமுடை உயிர்கொன்றான்;

ஆதலினால் துணிபொருள்தான் ஆற்றவும்மற் றவற்கொல்லும்

அதுவேயாம் எனகினைமின். ' இதுவும் மனுநீதிச் சோழ மன்னன் தன்னுடைய அமைச்சர்களைப் பார்த்துக் கூறியது. போற்று-வாழ்த் துக்களை ஒருமை பன்மை மயக்கம். இசைத்து-கூறி.