பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I8 பெரிய புராண விளக்கம்

சிறப்பை அடியேன் பாடுவதற்கு அடி எடுத்து வழங்கியருள வேண்டும்' என்று கூறி நடராஜப் பெருமானுடைய திருவருளைப் பெற நினைந்து அந்தப் பெருமானைச் சேக்கிழார் வணங்கினார்.

திருச்சிற்றம்பலத்தில் நின்று கொண்டு திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானாருடைய திருவருளினால் அசரீரிவாக்கு ஒன்று, 'உலகெலாம்' என்று அடியெடுத்துப் பெருமை பெற்ற ஒலியாக உரக்க எழுந்து அங்கே இருந்த அடியவர்களுடைய .ெ ச. வி. க ளி ல் விழுந்து நிரம்பியது. - -

அவ்வாறு அசரீரி வாக்குக் கேட்டபோது தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள், சிதம்பரத்தில் விளங்கும் பல மடாதிபதிகள் முதலிய கணக்கு இல்லாத், மக்கள் எல்லோரும் பேரானந்தக் கடலில் முழுகினார்கள். அவர்கள் யாவரும் தங்கள் கைகளைத் தங்களுடைய தலை களின் மேல் வைத்து நடராஜப் பெருமானைக் கும்பிட்டு, வணங்கித் தங்கள் உள்ளங்களில் உருக்கத்தை அடைந்தார் கள். அப்போது தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவர் நடராஜப் பெருமானார் அணிந்திருந்த அழகிய மாலை ஒன்றையும், திருநீற்றையும், ஒரு பரிவட்டத்தையும் சேக்கிழாருக்கு வழங்கினார். சிதம்பரத்தில் வாழும் மக்கள் எல்லோரும் சேக்கிழார் தங்கள் ஊருக்கு வந்திருப்பதை, அறிந்து பெருமகிழ்ச்சியை அடைந்தார்கள். தொண்டர் களினுடைய சிறப்பையும் தொண்டுகளையும் பாடுவதற்கு, மற்றச் செய்யுட்களைக் காட்டிலும் உயர்வைப் பெற்றவை யாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திரு நாவுக் கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூன்று நாயன்மார்களும் பாடியருளிய திருநெறித் தமிழாகிய தேவாரத் திருப்பதிகங்களே துணை புரிபவை ஆதலால் வரன்முறைப்படி அந்த மூன்று நாயன்மார்களையும் சேக்கிழார் தியானித்து வணங்கிவிட்டுச் சைவ சாதனங்