பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகர்ச் சிறப்பு 28翼

அன்னவனும் அதுசெய்யா

தகன்றுதன்ஆ ருயிர்துரப்பத் தன்னுடைய குலமகனைத்

தான்கொண்டு மறுகணைந்தான்.”

மன்னவன்-மனுநீதிச் சோழ வேந்தன். தன்-தன்னு: டைய. மைந்தனை- வலிமையைப் பெற்ற புதல்வனை. அங்கு-தான் இருந்த இடத்திற்கு. அழைத்து-அழைத்துக் கொண்டு வரச் செய்து. ஒரு மந்திரிதன்னை-தன்னுடைய அமைச்சன் ஒருவனை. தன்-அசைநிலை. முன்-முன்னால். இவனை-இந்த என்னுடைய புதல்வனை. அவ்வீதி-பசுமாடு தன்னுடைய கன்றுக்குட்டியை இழந்து நிற்கும் அந்தித் தெருவுக்கு அழைத்துச் சென்று. முரண்-வலிமையைப் பெற்ற தேர்-ஒரு தேரில் நீ ஏறிக்கொண்டு போய். க்:சந்தி. கால்-அதனுடைய சக்கரங்களை ஒருமை பன்மை மயக்கம். ஊர்க-அவன்மேல் செலுத்தி ஒட்டுவாயாக. என-என்று சோழ மன்னன் ஏவ; இடைக்குறை. அன்னவனும்-அந்த அமைச்சனும், அது-அந்தக் காரியத்தை. செய்யாது-புரிய மனம் இல்லாமல். அகன்று-அந்த இடத்தை விட்டுச்சென்று,

தன்-தன்னுடைய. ஆருயிர்-பெறுவதற்கு அருமை யாகிய உயிரை. துறப்ப-விட்டுவிட்டு இறக்க, த், சந்தி. தன்னுடைய-சோழ ம ன் ன ன் த ன் னு ை- ய.

குல-குடும்பத்தில் பிறந்த மகனை-புதல்வனை. த்:சந்தி, தான்-தானே. கொண்டு-ஒரு தேரில் ஏற்றி அழைத்துக் கொண்டு. மறுகு- அந்தத் தெருவை. அணைந்தான்அடைந்தான். . . . . .

அடுத்து உள்ள 44-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'தன்னுடைய குடும்பத்துக்கு ஒரு புதல்வனே இருக்கிறான் என்பதை மனுநீதிச் சோழன் எண்ணிப் பார்க்கவில்லை; தருமம் தன் வழியில் நடக்குமாறு செய்வதே தன்னுடைய கடமை என்று எண்ணித் தன்னுடைய புதல்வனுடைய