பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 285

வாமபாகத்தில். உமையாளும்-உமாதேவியையும். எம்மருங் கும்-எந்தப் பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். பூதகணம்-பூதங்களின் கூட்டம். புடை-தன் பக்கத்தில். நெருங்கும்-நெருங்கியிருக்கும். பெருமையும்-பெருமையை யும். முன்-தன்னுடைய முன்னால். கண்டு-தரிசித்து. அரசன்-மனுநீதிச் சோழமன்னன். போற்றுவாழ்த்துக் கனை; ஒருமை பன்மை மயக்கம். இசைப்ப-கூறி வணங்க. விடை-இடபவாகனத்தின்மேல். மருவும்-எழுந்தருளி யிருக்கும். பெருமானும்-வீதிவிடங்கப்பெருமானும், விறல்போரில் பகைவர்களை வென்று பெறும் வெற்றியைஉடைய, வேந்தற்கு-மனுநீதிச் சோழனுக்கு. அருள்-தன்னுடைய திருவருளை. கொடுத்தான்-வழங்கினான். -

பூதகணம் சூழ இருத்தல்: 'பூத நாதர். , குண்டைக் குறட்பூதம் குழும.', 'பூதம் புடைசூழ.’’, 'பூதம் பாடப் புறங்காட்டிடை ஆடி.' பூதம்பல் படையாக்கிய காதலான்.', 'பூதம் சூழப் பொலிய வருவார். , 'பந்தம் உடைய பூதம் பாட', 'பூதவினப் படை நின்றிசை பாட வும் ஆடுவர்.' , 'படைப்பூதத்தான். ' குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து.’’, 'பூதமொடு பேய்கள்.பல பாட நடமாடி. , 'பூதத்தின் படையினர்.’’, 'பல்பூதங்கள் துதிசெய.’’, பூதம் சேர்ந்திசை பாடலர்.’’, 'பூதம் சூழப் பொவிந்தவன்.', 'பாரிடம் பணிசெயும்.’’, 'பூதங்கள் பலவுடைய புனிதர். , 'பூதம் முன்னியல்புடைப் புனிதர். ', 'பூதமுதல்வன்.' 'பாரிடம் பணிசெய்ய ஏதமில பூதமொடு. , 'பூதமொ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், பாடிளம் பூதத்தி னானும்., 'பக்கமே பாரிடங்கள் சூழ.’’, பூதம் சூழப் புலியுரியதள னார்.’’, 'பூதங்கள் பாடியாடல் உடையவன்.', 'பாடிய பூதம் சூழ. பூதங்கள் பலவும் வைத்தார்.’’, 'பூதத்தின் படையர்.’’, 'படைகொள் பூதங்கள்.’’, 'பூதத்தான் என்பார்.’’, 'பூதம் பாட நின்றாடும் புனிதனார்.'