பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 299

'நீறார் மேனியனே.”, பொடியார் மேனியனே. , "நீற்றாரும் மேனியராய். , பொடியேறு திருமேனிப் பெரு மானை.’’, 'நீறுதுந் திருமேனி நித்திலம்.’’, "முழுநீறு பூசிய முனிவர்., 'பொடியாடு மேனியன்.’’, வெந்த நீறு மெய் பூச வல்லானை.”, மெய்யை முற்றப் பொடிப் பூசியோர் நம்பி. , செம்பொன் மேனி வெண்ணிறணி வானை.', 'முழுநீறணி மேனியன்.','வெண்பொடி மேனி யினான்' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், நீறு பட்டே ஒளிகாட்டும் பொன்மேனி நெடுந்தகையே. , 'நீற்றார்.தரு திருமேனி நின்மவனே." என்று மாணிக்க வாசகரும் நீறுபெறும் திருமேனி ' என்று கபிலதேவநாய னாரும், நீறடுத்த செந்தாழ்வரையின் திரள்போல் திருமேனி' என்று இளம்பெருமான் அடிகளும், பொடி யேர்தரு மேனியன்.' என்று நம்பியாண்டார் நம்பியும் பாடியருளியவற்றைக் காண்க. . . -

பின்பு வரும் 4-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

அகிலாண்டங்களைப் படைக்கும் மூலகாரணராகிய சிவபெருமானாருடைய திருவடிகளை வணங்கும் அடியவர் கள் எல்லா உலகங்களையும் ஆட்சி புரிவதற்கு உரிமையை உடையவர்கள் என்று எண்ணி எல்லா உலகங்களிலும் வாழும் மக்கள் அடைவதால் அந்தத் தேவாசிரயன் என்னும் காவணம் எல்லா உலகங்களையும் போல விளங்குவது; அந்தக் காவணத்தில். பாடல் வருமாறு:

அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்

அகில லோகமும் ஆளற் குரியம்என் றகில லோகத்து ளார்கள் அடைதலின் அகில லோகமும் போல்வ ததனிடை' இந்தப் பாடல் குளகம், அகில-அகிலாண்டங்களைப் படைக்கும்; ஒருமை பன்மை மயக்கம். காரணர்-மூலகாரண ராகிய சிவபெருமானாருடைய. தாள்-திருவடிகளை;