பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பெரிய புராண விளக்கம்

ஒருமை பன்மை மயக்கம். பணிவார்கள்தாம்-வணங்குபவர் கள்; தாம்: அசை நிலை. அகில-எல்லா லோகமும்-உலகங் களையும்; ஒருமை பன்மை மயக்கம். ஆளற்கு-ஆட்சி புரிவ தற்கு. உரியர்- உரிமையைப் பெற்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். என்று-என எண்ணி. அகில-எல்லா. லோகத்து-உலகங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். உளார்கள்-வாழும் மக்கள்; இடைக்குறை. அடைதலின்வந்து சேர்வதால். அகில - எல்லா; லோகமும்-உலகங்களை யும்; ஒருமை பன்மை மயக்கம். போல்வது-போல விளங் குவது அந்தத் தேவாசிரயன் என்னும் காவணம். அதனிடைஅந்தக் காவணத்தில்.

அகில காரணர்: விண்முதல் பூதலம் ஒன்றிய இரு சுட ரும்பர்கள் பிறவும் படைத்து. ’’, உரைசேரும் எண்பத்து நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து., பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்.” என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், மூன்றாய் உலகம் படைத்துகந்தான்.','முந்தி உலகம் படைத்தான்.” *சென்றுருளும் கதிரிரண்டும் விசும்பில் லைத்தார் திசை பத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார். படைத் தானாம் பாரை.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'படைத்தாய் ஞாலமெலாம். என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'அனைத்துலகும் ஆ க் குவா ய்.’’, * முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன்.', 'படைப்பாய் காப்பாய் துடைப்பாய்.”, காப்பாய் படைப் பாய் கரப்பாய் முழுதும்.’’ என்று மாணிக்கவாசகரும் பாடி யருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 5-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு :

"தந்தையாரைப் போன்றவராகிய வன்மீக நாதர் தாமே விரும்பி முன்பு ஆட்களாகக் கொள்ளப் பெற்றவர்கள் பக்தியினால் உண்மை பேசுவதில் தழைப்பை அடைந்து