பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 21.

காலம்மையார், மூர்த்தி நாயனார், கலிக்கம்ப நாயனார், அமர்நீதி நாயனார், இயற்பகை நாயனார் என்பவர் களுடைய புராணங்களையும், வேளாளர்களாகிய பதின் மூன்று பேர்களுடைய புராணங்களையும் பாடலானார். அவர்கள் மூர்க்க நாயனார், செருத்துணை நாயனார், வாயிலார் நாயனார், கோட்புலிநாயனார்,சத்தி நாயனார்: அரிவாட்டாய நாயனார், இளையான்குடி மாற நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சாக்கிய நாயனார், மானக் சஞ்சாற நாயனார், விறன்மிண்ட நாயனார், முனையடு வார் நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்ப வர்கள். ஆயர் மரபில் தோன்றிய இரண்டு நாயன்மார் களாகிய திருமூல நாயனார், ஆனாய நாயனார் என்பவர் களுடையபுராணங்களும் பெரிய புராணத்தில் அமைந்தன. குலாலராகிய திருநீலகண்ட நாயனார், பாணர் குலத்தில் தோன்றிய திருநீலகண்டத்துயாழ்ப்பெரும்பாணநாயனார், மீனவராகிய அதிபத்த நாயனார், வேடராகிய கண்ணப்ப நாயனார், சான்றாராகிய ஏனாதி நாத நாயனார், சாலியராகிய நேச நாயனார், இழிகுலத்தில் உதித்தவ ராகிய திருநாளைப்போவார் நாயனார், துணி வெளுக்கும் குலத்தில் தோன்றிய திருக்குறிப்புத் தொண்ட நாயனார், எண்ணெய் வணிகர் குலத்தில் உதித்த கலிய நாயனார், இன்ன குலம் என்று தெரியாத நாயன்மார்கள்பதின்மூன்று பேர்கள், குலச்சிறை நாயனார், தண்டியடிகள் நாயனார், கணம்புல்ல நாயனார், எறிபத்த நாயனார், காரி நாயனார், பெருமிழலைக் குறும்ப நாயனார், பத்தராய்ப் பணிவார்கள், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார். திருவாரூர்ப் பிறந்தார், பொய்யடிமை யில்லாத புலவர் முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச் சார்ந்தார் என்ற இவர்களுக்குள் செந்தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சில பேர்கள். கன்னட மொழி பேசுகிறவர்கள் சிலர்,தெலுங்கு மொழியைப் பேசு கிறவர்கள் சிலர், மலையாள மொழி பேசுகிறவர்கள் சிலர், வேறு நாடுகளில் வாழ்ந்து தவம் புரிந்து சிவலோகப்பிராப்தி