பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 27

அதைத் தம்முடைய திருவுள்ள்த்தில் பதித்துக்கொண்டு மகிழ்ந்த சேக்கிழார் இயற்றிய புராணத்தையும் அந்தச் சேக்கிழாரையும் நான் வணங்குவேன்' என்று கூறிச் சோழமன்னன். புறப்பட்டான்.

ஒவ்வொரு வீதியிலும் அரசன் புறப்பட்டு வருகிறான் என்று வெற்றி முரசை அடித்து வள்ளுவர்கள் அறிவித்தார் கள். தில்லைவாழ் அந்தணர்கள் கணக்குப் பார்த்து வரை யறுத்துக் கூறிய நட்சத்திரமும், முகூர்த்தமும் நன்றாக ஆராய்ந்து மலையைப் போன்றதும் மூன்று மதங்கள் ஒழுகுவதுமாகிய ஆண் யானை, குதிரை, தேர், காலாட்கள் என்ற சதுரங்க சேனை தன்னுடன் வர, முழங்குகின்ற பட்டத்து யானையின்மேல் ஏறிக்கொண்டு சோழ மன்னன் சென்றான். .

தேர் ஒடும்போது முழங்கும் ஒலி, மழையைப் போல் மதங்களை வழியவிடும் ஆண் யானை பிளிறும் முழக்கம், குதிரை ஓடும் சத்தம், காலாட்கள் வந்து சேர்ந்து முழங்கும் ஆரவாரம், ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் ஒலி ஆகிய இந்தச் சத்தங்கள் ஏழு மேகங்கள் முழங்கும் முழக் கத்தைப் போலவும், பதினாறு சமுத்திரங்கள் முழங்கும் முழக்கத்தைப் போலவும் எழுந்தன. .

சோழ மன்னனுடைய வரவைத் தெரிந்துகொண்டு தில்லைவாழ் அந்தணர்களும், மடாதிபதிகளும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றிகளைப் பெற்ற பெண்மணி களும், மற்றும் உள்ள சான்றோர்களும் போற்றும்வண்ணம் பிறர்பாடிய நூல்களில் உள்ள சொற்களையும் பொருள் களையும் திருடித் தம்முடைய நூலில் பயன் படுத்தாமல் தாம்ே சிந்தித்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வைத்துத் தொண்டர் புராணமாகிய நாயனார்களுடைய வரலாறு களைப் பாடியருளியகங்காகுல திலகரும் முல்லை மாலை, யை அணிந்த சோழ மன்னனை எதிர் கொண்டு வரவேற்று