பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 35

சொல்லி நிறைவேற்றுவோம்” என்று குன்றத்துாரில் திருவவதாரம் செய்தருளிய சேக்கிழார் பொருளை விரித்துச் சொல்ல, ஒவ்வொரு நாளும் சோழ மன்னனும் நடராஜப் பெருமானுடைய பக்தர்களும் அமர்ந்து அதைக் கேட்டு மகிழ்ந்தார்கள். - . - - -

சிறப்பைப் பெற்ற திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூன்று தலைவர்களாகிய நாயன்மார்களும் திருவாய் மலர்ந்தருளிச் செய்த திருநெறிய தமிழாகிய தேவாரத் திருப்பதிகங்களும், திருமூல நாயனார் பாடியருளிய திருமந்திரமாலையும், காரைக்காலம்மையார் பாடியருளிய திருவிரட்டைமணிமாலை, அற்புதத் திரு அந்தாதி, மூத்த திருப்பதிகம் ஆகிய நூல்களும், கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனார் பாடியருளிய பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கை வாய ஞான உலா என்னும் நூல்களும், ஐயடிகள் காடவர் கோன் நாயனார் ப்ாடியருளிய கேத்திரத் திருவெண் பாவும் ஆகிய நூல்கள் அங்கங்களாகவும், பெரிய புராணத் தில் உள்ள திருவிருத்தங்கள் உடம்பாகவும், எட்டு வகை யான பொருள்கோள்கள் உயிராகவும் கொண்டு நான்கு அடிகளால் அமைந்த பாடல்களால் பெரிய புராணம் உலக முழுவதும் பரவியது. - - -

அந்தத் திருவாதிரை நட்சத்திரம் முதல் ஒவ்வொரு நாளும் நடராஜப் பெருமானுடைய அடியவர்கள் ஆகிய அளவு கடந்த மக்களும், வேறு ஊர்களிலிருந்து பெரிய புராணத்தைக் கேட்பதற்குச் சிதம்பரத்திற்கு வந்தவர்களும் ஆகிய எல்லோரும் போய்த் தங்குவதற்காகத் திருமடங் களையும் கட்டுவித்து, அந்தத் திருமடம் ஒவ்வொன்றிலும் திருவிளக்குகள், அந்த மக்கள் அணிந்துகொள்வதற்கு ஆண்டகள், மேலே போர்த்துக் கொள்வதற்கு உரிய ப்ோர். வைகள், அவர்கள் உண்பதற்குச் சம்பா நெல்லின் அரிசிச்'