பாயிரம் 47
உலகு- இந்தம் பூமண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். எலாம்-எல்லோரும்; இடைக்குறை. உணர்ந்துதன்னுடைய பெருமையைத் தெரிந்து கொண்டு. ஒதற்குஅவற்றை எடுத்துச் சொல்வதற்கு.அரியவன்- அருமையாக உள்ளவனும், நிலவு-நிலாவை வீசும் பிறைச்சந்திரனும்; ஆகு பெயர். உலாவிய-அலைகளை வீசிய, நீர்-கங்கை யாற்றின் நறும் புனலும். மலி- தங்கிய வேணியன்- சடா டாரத்தைத் தன்னுடைய தலையிற் பெற்றவனும். அலகுஅளவு. இல்- இல்லாத கடைக்குறை, சோதியன்-சோதி வடிவமாக விளங்குபவனும். அம்பலத்து- சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் ஆடு வான்- ஆனந்தத் தா ண்டவம் புரிந்தருளுபவனுமாகிய நடராஜப் பெருமானுடைய. சிலம்பு-சிலம்புகள்; ஒருமை பன்மை மயக்கம், மலர்-மலர்ச்சியைப் பெறும். அடி-திரு. வடிகளை ஒருமை பன்மை மயக்கம். வாழ்த்தி- வாழ்த் துக்களைக் கூறி. வணங்குவாம்- பணிவோமாக, "உலகத் தில் வாழ்பவர்கள் உணர்ந்து கொள்வதற்கும்,தன் னுடைய பெருமைகளை எடுத்துச் சொல்வதற்கும் அருமை. யாக இருப்பவன். எனலும் ஆம். திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, உலகெலாம் மலர். சிலம்படி என்று கூட்டிப் பொருள் செய்வார். -
சோதியன்: அறிவரிய சோதியானே.”, “அன்னியூர்ச் சோதி,, 'பூந்தராய்ச் சோதி.', 'சோதியாய் நிறைந்: தான்.', சோதியே சுடரே.'; 'சோதியுள் ஒர் சோதி யாய்,' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், சோற்றுத் துறைஎம் சோதியை.', 'சோதியாய்ச் சுடர் விளக்காய்.', சோதியே சுடரே.', 'சோதியாய்ச் சுடரும் ஆனார்." சோதியாய்ச் சுடரதர்னார்." சோதியைத் துருத்தியானை.', 'சோதியுட் சுடருமாகி', 'சோதியுட் சுடராய்த் தோன்றி. உமையவள் பங்கா மிக்க, சோதியே', 'சோதியைத் துளக்க மில்லா விளக்கினை,”