பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4° பெரிய புராண விளக்கம்

"ஒருவருக்கும் அறிவொணாச் சோதியை', 'ஆவடு, தண்டு றை மேலிய சோதியே.','பராய்த்துறைச் சோதியானை.' “நின்மலனே என்றும் சோதியான் என்றும்.', 'சோதியார் தரு தோணிபுரவர்,”, “பழையாறை வடதளிச்சோதியை.", 'உணர்தற்கரியதோர் சோதியானை", "பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதியே.”, 'தாண்டு சுடரணைய சோதி கண்டாய்.”, 'சோதியாய் இருளாகி.', "செழுஞ்சுடர் நற்சோதி' 'சுடர்ப்பவளச்சோதியானை', "மிக்க சோதியனை' என்று திருநாவுக்கரசு நாயனாரும், சோதியிற் சோதி எம்மானை.', 'வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழநற் சோதிய துருவாகி.', 'அயன்மால் அறிதற்கரியசோதியன். என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே.' "தூண்டு சோதி,', 'பரம்பரஞ் சோதிப் பரனேபோற்றி", 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை.' 'பாசம் பரஞ்சோதிக்கு.", சோதி திறம்பாடி.', 'சோதியு மாய் இருளாயினார்க்கு.', 'சோதியாய்த் தோன்றும் உருவமே', 'சோதியேசுடரே சூழ்ொளி விளக்கே." என்று மாணிக்கவாசகரும், சோதியாய் உணர்வுமாகி.' என்று சேக்கிழாரும், மாசறு சோதியை,' என்று நக்கீர தேவ நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 2-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

மாமிசங்களைப் பெற்ற மனித உடம்பை எடுத்த இந்தப் பிறப்பே தேன் நிரம்பிய மலர்கள் மலர்ந்த பல வகை யான மரங்கள் வளர்ந்து நிற்கும் சோலை சூழ்ந்த தில்லை யாகிய சிதம்பரத்தில் விளங்கும் திருக்கோயிலில் இருக்கும் திருச்சிற்றம்பலத்தில் பெருமையைப் பெற்ற திருநடனத் தைப் புரிந்தருளும் வரதராகிய நடராஜப் பெருமானா ருடைய தங்கத்தைப் போன்ற திருவடிகளை வணங்குவத னால் தான் பெற்ற உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை அடையும்.