பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரிய புராண விளக்கம்

தது பின்வரும் குலோத்துங்க சோழன் உலாவில் வரும் பகுதியால் உணரலாகும்.

"...ஆலத்தான்

ஆடும் திருப்பே ரம்பலமும் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும்- கூடிப் பொலங் கோட்டு மாமேருப் பூதரமும் போய வலங்கோட் டிகிரியும் மானத்-தவம்கொள் நிலையேழு கோபுரங்கள் நேரே நெருங்க மலையேழும் என்ன வகுத்துத்-தலையில் மகரங்கொள் கோபுரங்கள் மாக விமானம்

சிகரங்க ளாகித் திகழ-கிகரில்

எரிபொற்' படர்பாறை என்னலாய் எங்கும் விரிபொற்றிரு முற்றம் மின்னச்-சொரிபொற் கடாரப் பனிநீர். கவனிச் கனயொற் றடாகங்சளாகித் ததும்டி.

அடுத்து உள்ள-9ஆம் பாடலின் கருத்து வருமாறு; 'நடராஜப் பெருமான் வழங்கும் திருவருளின் இயல்பையும், நாயன்மார்கள் புரிந்த திருத்தொண்டுகளையும் தெரிந்து கொள்வதற்கு உரிய தெளிவான அறிவு இல்லாத நீர் இந்தப் பெரிய புராணத்தைப் படுவதற்கு முடியுமோ?" என்று யாரேனும் கே ட் டா ல், மயக்கம் இல்லாத உண்மையான சொற்றொடராகிய உலகெலாம் என்று ஆகாயத்திலிருந்து அசரீரி வாக்கு எடுத்துக் கொடுத் ததனால் அடியேனால் பாட முடியும்' என்று கூறுவோம்."

பாடல் வருமாறு:

' அருளின் கீர்மைத் திருத்தொண்டறிவரும் தெருளில் நீர் இது செப்புதற் காம்எனின் வெருளில் மெய்ம்மொழி வாள்நிழல் கூறிய பொருளின் ஆகும் எனப்புகல் வாமன்றே.”