பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※资{} பெரிய புராண விளக்கம்

தங்கிருள் இரண்டில் மாக்கள் சிங்தையுட் சாாந்து கின்ற

பொங்கிய இருளை ஏனைப்

புற இருள் போக்கு கின்ற

செங்கதி ரவன்போல் நீக்கும்

திருத்தொண்டர் புராணம் என்பாம்.'

இங்கு - இந்தப் பாயிரத்தில். இதன் இந்தக் காப் பியத்தினுடைய. நாமம்-பெயரை. கூறின்-சொன்னால் இவ்வுலகத்து - இந்தப் பூமண்டலத்தில், முன் நாள்-பழைய காலத்திலிருந்து. தங்கு-இந்தக் காலம் வரையில் தங் கியிருக்கும். இருள்-இருட்டுக்கள்; ஒருமை பன்மை மயக்கம். இரண்டில்-இரண்டு வகையான இருட்டுக் களுக்குள். பாக்கள்-அறிவில்லாத மக்களுடைய. சிந்தையுள்உள்ளங்களுக்கு உள்ளே; ஒருமை பன்மை மயக்கம். சார்ந்து, சேர்ந்து. நின்ற-நீங்காமல் நின்றதும், பொங்கிய-பொங்கி எழுவதும் ஆகிய இருளை-இருட்டாகிய அறியாமையை. இருள்-அறியாமை; 'இருள்நீங்கி இன்பம் பயக்கும்' (352) என்று திருக்குறளில் வருவதைக் காண்க.