பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரிய புரான விளக்கம்

நிலவும்- இந்தப் பூமண்டலத்தில் இருத்து விளங்கும். எண்-கணக்கு இல்-இல்லாத கடைக்குறை. தலங்களும் -சிவத்தலங்களும். நீடு- நெடுங்காலமாக. இலகு விளங்கும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற தளிர்-தளிர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. ஆகஆகவும். எழுந்தது- எழுந்து தோன்றியது. ஒர்-ஒரு. உலகம்பூமி. என்னும் என்று வழங்கும். ஒளி - பிரகாசம் வீசும். மணி-மாணிக்க வல்விமேல்- கொடியின்மேல். மலரும் - மலர்ச்சியைப் பெறும். வெண் - வெள்ளை நிறத்தைப் பெற்ற மலர் - மலரை. அ - அந்த .ம்: சந்தி.மால் - பெரிய. வரை-திருக்கயிலாய மலை, போல்வது - போல விளங்குவது .

பின்பு உள்ள 4-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

மேம்பாட்டைப் பெற்ற இருக்கு வேதம், யஜுர் வேதம்,

சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களின் கானமும், வித்தியாதரர்கள் மீட்டிப் பாடும் இசை யொலி யை எழுப்பும் வீணையினுடைய இனிய நாதமும், மேகத் துக்கு நிகராகக் கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்ற மூன்று மதங்களையும் ஒழுக்விடும் யானைகள் பிளிறும் பேரொலியும், கெடுதல் இல்லாத சீர்த்தியைப் பெற்ற ஆகாச துந்துபிகளின் முழக்கமும் அந்தத் திருக்கைலாயத்தி னுடைய பக்கங்களில் எல்லாம் கேட் கு ம்.' பாடல் வருமாறு: . -

"மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்

கான வீணையின் ஒசையும் காரெதிர் தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர் வானதுங்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்." மேன்மை-மேம்பாட்டைப் பெற்ற.நான்மறை-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்குவே தங்களை வேதியர்கள் ஒதும் ஒருமை பன்மை மயக்கம். நாதமும்- காளமும்.விஞ்சையர்