பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெரிய புராண விளக்கம்

பறவையையும். காணாது- பார்க்க முடியாமல். அயர்க்கும் சோர்வை அடைவான். ஆல்: ஈற்றசைநிலை.

பின்பு உள்ள 8 - ஆம் கவியின் கருத்து வருமாறு: 'தன்னுடைய செவிகளில் வெள்ளை நிறத்தைப் பெற்ற சங்குக் குழைகளை அணிந்தவனாகிய கைலாச பதியினுடைய வீரக்கழலைப் பூண்ட திருவடிகளை வணங்குவதன்பொருட்டு உயரமான திருவுருவத்தைக் கொண்ட திருமால் உரிய நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்ததையும் தெரிந்து கொள்ளாதவனாகி வெண்மையான ஒளிவெள்ளத்தை வீசும் கயிலாய மலையினுடைய அடிவாரத்தில் உள்ள ஒரு குகையில் துதிக்கையை உடையவனாகிய விநாய்கப் பெருமானுடைய வாகனமாகிய மூலதிகத்தைப் பார்த்து வானத்தின்மேல் எழுந்து செல்லும் பழையவனும், சிவந்த கிரணங்களைப் பெற்றவனுமாகிய சூரியன் இன்றைக்கு வெள்ளை நிறத்தைக் கொண்ட நிலாவை, வீசும் சந்திரனாகி விட்டான் என்று. எண்ணி, அந்தக் கயிலாய மலையின் அடியில் தான் முன்காலத்தில் கொண்ட பன்றியினுடைய வடிவத்தைப் பெற்றவனாக் மாறிக் கயிலாய மலையைத் தோண்டலானான் என்று எண்ணி அந்தத் திருமாலி னுடைய வாகனமாகிய க்ருடன் அந்தப் பன்றியினிடம் வந்து சேர்வானானான். பாடல் வருமாறு:

“காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன் காலம்பார்த் திருந்ததும் அறியான் . சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு மீதெழு பண்டைச் செஞ்சுடர் இன்று வெண்சுடரானதென் றதன்கீழ் ஆதிஏ னமதாய் இடிக்கலுற்றான்என்

றதனைவங் தணைதரும் கலுழன்'.