பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 பெரிய புராண விளக்கம்-10

இந்தப் பாடல் குளகம். சீர்-சீர்த்தியைப் பெற்ற, மறை யோர்-வேதியரும். சிவபாத இருதயரும்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய தந்தையாரும் ஆகிய சிவபாத இருதயரும் சிறுபொழுதில்-சிறிது நேரத்தில். நீர்-பிரமதீர்த் தத்தில் நிரம்பியிருக்கும் நீரை. மருவி-அடைந்து தி: சந்தி. தாம் செய்யும்-தாம் வழக்கமாகப் புரிந்து கொண்டு வரும். நியமங்கள்-சந்தியாவந்தனம், பிரம்மயக்ளும் முதலிய நியமங்களை. முடித்து-செய்து நிறைவேற்றி விட்டு. ஏறிபிறகு அந்தப் பிரம தீர்த்தத்தின் கரையின் மேல் ஏறிவந்து. ப்: சந்தி, பேருணர்வில்-பெரியதாக விளங்கும் மெய்ஞ் ஞானத்தோடு. பொலிகின்ற-விளங்குகின்ற. பிள்ளையார் தமை.தம்முடைய ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. தமை: இடைக்குறை. தம்: அசைநிலை. நோக்கி-பார்த்து. நீ யார்-நீ எவர். அளித்தஉனக்குக் கொடுத்த, பால் அடிசில்-பாலாகிய உணவை. உண்ட்து.குடித்தது. என-என்று கேட்டு இடைக்குறை. வெகுளா-கோபித்துக் கொண்டு.

அடுத்து உள்ள 73-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

  • தம்முடைய தந்தையாராகிய சிவபாத இருதயர், * எச்சில் நீர் கலந்திருக்குமாறு உனக்கு இந்தப் பாலை அளித்தவரை எனக்குக் காட்டுவாயாக' என்று கூறி விட்டுத் தம்முடைய வலக்கையில் சிறியதாகிய ஒரு கோலை எடுத் துக் கொண்டு தம்மை அடிப்பதற்காகத் தம்முடைய வலக் கையை ஓங்கத் தம்முடைய திருவடிகளைத் தரையிலிருந்து எடுத்து அந்தச் சிறியவராகிய பெருமையையும் தகுதியையும் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஆனந்தக் கண்ணிர்த் துளிகளைச் சொரிந்து தம்முடைய தலைக்கு மேல் எடுத்தருளும் ஓர் அழகிய வலக்கையில் உள்ள கட்டு விரலால் சுட்டிக் காட்டி" பாடல் வருமாறு:

' எச்சில்மயங் கிடஉனக்கி திட்டாரைக் காட் டென்று கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சக் காலெடுத்தே