பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - பெரிய புராண விளக்கம்.18

ஒருநெறிய மனம்வைத்துனர் ஞானசம் பந்தன்

னுரை செய்த திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல்

எளிதாமே.”* சீகாழி: இது காழி எனவும் வழங்கும். இது சோழ நாட் டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவரு டைய திருநாமங்கள் பிரமபுரீசர், தோனியப்பர், சட்டை நாதர் என்பவை. இந்தத் திருநாமங்கள் வேறு வேறு இடங் களில் உள்ள மூர்த்திகளின் திருநாமங்கள். அம்பிகை திருநிலை நாயகி. தீர்த்தம் பிரம தீர்த்தம். இந்தச் சிவத் தலம் சிதம்பரத்திற்குத் தெற்குத் திசையில் 11-மைல் தூரத் தில் உள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவ தாரம் செய்தருளிய தலம் இது. இந்தத் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் பிரமபுரீசரும் திருநிலை நாயகியும் தம்மை ஆட் கொண்டதை, 蜘

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை

. உண்டு பலபொய் ஒதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிவை நன்றதுணர் வீருரை மினோ ஆதியெமை யாளுடைய அரிவையொடு பிரிவிலி ,

. அமர்ந்த பதிதான் சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல்

புகஎறிகொள் சண்பை நகரே."

" காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்

கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன் ஒலம திடமுன் உயிரொடு மாள

உதைத்தவன் உமையவள் விருப்பனம்

பெருமான் மாலைவந் தணுக ஒதம்வந் துலவி

மறிதிரை சங்கொடு பவளமுன் உந்தி வேலைவந் தனையும் சோலைகள் சூழ்ந்த

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே...'