பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பெரிய புராண விளக்கம்-1”

சீருறு தொண்டர் கொண்டடி போற்றச்

செழுமலர் புனலொடு தூபம்

தாருறு கொன்றை தம்முடி வைத்த

சைவனார் தங்கிடம் எங்கும்

ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலிபுனல் கொளவுடன் மிதந்த

காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகரென வாமே."

இந்தச் செய்தியைப் புலப்படுத்தி அக்க pruារ។ பாடியருளிய மற்றொரு பாசுரம் வருமாறு:

1. அருவரை பொறுத்த ஆற்றலி னானும்

அணிகிளர் தாமரை யானும்

இருவரும் ஏத்த எரியுரு வான

இறைவர் உறைவிடம் வினவில்

ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளம்முன் பரப்பக்

கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்கும்

கழுமல நகரென வாமே.'

"அமரர் புகலால் மலிந்த பூம்புகலி' என்று புகலி என்னும் பெயர் வந்ததற்கு உரிய காரணத்தைப் புலப்படுத்தல் காண்க.

பின்பு வரும் 77-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இக்க மண்ணுலகத்தில் வாழும் மக்கள் பிழைகளைப் புரிந்தாலும் தம்மை வந்து சேர்ந்தால் நெற்றியில் ஒற்றைக் கண்னைப் படைத்தவனாகிய கைலாசபதி பெருமையைப் பெற்று விளங்கும் கருணையைக் கைக் கொள்வார்கள் என்று காட்டுவதற்காக நல்ல எண்ணம் இல்லாத வலிமையைப் பெற்ற இராக்கதனாகிய இராவணன் கைலாய மலையைத் தூக்கித் தன்னுடைய கைகள் ஒடிந்த பிறகு சங்கீதப் பாடல்களை அவன் பாட தலைவனாகிய கைலாசபதி அந்த