பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 置罩赛

புண்டான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம்

பதியாக எண்டோ ளுடையான் இமையோ ரேத்த உமையோ

டிருந்தானே."

பாங்கிலா அரக்கன் கயிலையன் றெடுப்பப்

பலதலை முடியொடு தோளவை நெரிய

ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே

ஒளிதிகழ் வாளது கொடுத்தழ காய

கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம்

கொன்றையும் குலாவிய செஞ்சடைச் செல்வம்

வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே."

' கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர்

கதிர்முடி சுடர்விடக் கவரியும் குடையும்

பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய

பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்

பச்சமும் வலியும் கருதிய அரக்கன்

பருவரை எடுத்ததின் டோள்களை அடர்வித்

தச்சமும் அருளும் கொடுத்தளம் அடிகள்

ஆச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே...'

" வலம்கொள் புகழ்பேணி வரையால் உயர்திண்டோள் இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான் பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக் கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.”

" ஆவா என அரக்கன அலற அடர்த்திட்டுத்

தேவா என அருளார் செல்வம் கொடுத்திட்ட கோவே எருக்கத்தம் புலியூர் மிகுகோயில் தேவே என அல்லல் தீர்தல் திடமாமே.'

  • அரக்கன் நெரிதர, இரக்கம் எய்திரீைர்

பரக்கும் மிழலைபீர், கரக்கை தவிர்மினே."