பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 113

' மாடம் நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன் வாடியூட் வரையால் அடர்த்தன் றருள் செய்தவர் வேட வேடர் திருவாஞ்சியம் மேவிய வேந்தரைப்

பாட நீடு மனத்தார் வினைபற் றறுப்பார்களே."

  • பொலியும் மால்வரை புக்கெடுத் தான் புகழ்ந் தேத்திட

வலியும் வாளொடு நான்கொடுத் தான்மங் கலக்குடிப்

புவியின் ஆடையி னானடி ஏத்திடும் புண்ணியர்

மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.'

" ஓயாத அரக்கன் ஒடிந்தலற

நீயாரருள் செய்து நிகழ்ந்தவனே வாயார வழுத்துவர் நாகேச்சரதி தாயே எனவல் வினைதானறுமே.”

பரப்புறு புகழ்ப்பெருமை யாலின் வரை தன்னால்

அரக்கனை அடர்த்தருளும் அண்ணல் இடமென்பர் நெருக்குறு கடற்றிரைகள் முத்தமணி சிந்தச் செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே." " உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன் றரக்கனை அடர்த்தருளும் அப்பனிடம் என்பர் குரக்கினம் விரைப்பொழி லின்மீது கனி உண்டு பரக்குறு புனற்செய் விளையா டுவழுவூரே.' ' இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்தன் றெடுத்த

அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில் மருக்கு வாவிய மல்லிகை சண்பகம் வண்பூந் திருக்கு வாவிய தண்பொழில் நீடுகாய்க் காடே." ‘' எரித்த மயிர்வா ளரக்கன் வெற்பெடுக்கத்

தோளொடுதாள் நெரித் தருளும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான் உரித்த வரித்தோ லுடையான் உறை பிரமபுரந்

தன்னைத் தரித்த மனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே." பெ-10-8