பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 7

.ெ ச வ் வி த் தடமலரால்-மலர்ந்திருக்கும் பக்குவத்தைப் பெற்ற விசாலமாக உள்ள செந்தாமரை மலர்களோடு; உருபு மயக்கம். மலர்: ஒருமை பன்மை மயக்கம். களம் பயில்-இடம் விரிந்து நிலவும். நீர்-புனல் நிரம்பிய, க்: சந்தி, கடல்-சமுத்திரத்தின் மேல், மலர்வது-மலர்ச்சியைப் பெற்று உதயமாவதாகிய.ஒருபரிதி-ஒரு சூரியன்.என-என்று இடைக் குறை. க்சந்தி. கருதி.எண்ணிக் கொண்டு. இளம்பரிதி பல. பல இளஞ் சூரியர்கள்:ஒருமை பன்மை மயக்கம். மலர்ந்தாற் போல்-மலர்ச்சியைப் பெற்று உதயமானாற் போல விளங்கு பவை. இலஞ்சி பல-பல தடாகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். உள-இருக்கின்றன; இடைக்குறை.

அடுத்து வரும் 6-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

'தங்களுடைய திருவுள்ளங்களில் முறையாக அத்திய யனம் செய்து கற்றுக் கொள்ளும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் புரியும் ஹோமங்களில் எழும் புகையினால் இராத்திரி வேளையும், சிவபக்தர்கள் கிளர்ச்சியை அடைந்து தங்களு டைய திருமேனிகளின் மேல் பூசிக் கொண்ட விபூதியினுடைய பிரகாசத்தால் பொருந்திய நடுப்பகல் வேளையும் மலர்ச் சியை அடைந்து அளந்து தெரிந்து கொள்ள முடியாத பல ஊழிக்காலங்களில் செய்வதால் இந்த அகலமாகிய நிலவுலகத் தில் திகழ்ந்த அந்தப் பழைய ஊராகிய சீகாழிக்கு இவற்றைத் தவிர வேறாக உள்ள இரவு வேளையும், பகல் நேரமும் வேண்டாத மிகுதியானவை. பாடல் வருமாறு:

' உளங்கொள் மறை வேதியர்தம் ஓமது மத்திரவும்

கிளர்ந்ததிரு நீற்றொளியிற் செழுமியகண்

பகலுமலர்க் தளங்தறியாப் பல்லூழி ஆற்றுதலால் அகலிடத்து விளங்கிய அம் மூதுர்க்கு வேறிரவும் பகலும்மிகை.