பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 121

ஏ: அசைநிலை. நலம்-நல்ல எண்ணங்களை ஒருமை பன்மை மயக்கம். கொள்ளும்-தங்களுடைய உள்ளங்களில் மேற்கொள்ளும். போதம்-ஞானம். இலார்-இல்லாதவர் களுமாகிய ஒருமை பன்மை மயக்கம்; இடைக்குறை. . சமண்-சமணர்களாகிய, திணை மயக்கம். கையர்-இழிந்த குணங்களையும் இழிந்த செயல்களையும் பெற்றவர்களு டைய ஒருமை பன்மை மயக்கம். புத்தர்-பெளத்தர்களினு டைய. வழி-சமய நெறியும். பழி-பழியை உடையவை ஆக: ஆகுபெயர். ஆக்கும்-புரியும். ஏதமே-குற்றத்தை உடை யனவே ஆகுபெயர் என-என்று; இடைக்குறை. மொழிந் தார்.திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பிறகு வரும் 80-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் மேலே கூறிய கருத்துக்களை வைத்து ஒரு திருப்பதிகத்தைப் பாடி யருளி, அதை நிறைவேற்றித் திருக்கடைக் காப்பையும் பாடி யருளி, தமிழ் வேதம் ஆகிய திருப்பதிகங்களைப் பாடியரு ளும் ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிரமபுரீசருடைய சந்நிதியில் அந்த ஈசரைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரை யிலிருந்து எழுந்து நின்று கொண்டருள பிரமபுரீசர் வழங்கிய திருவருளையும் கருணையையும் திருவாளனாராகிய அந்த நாயனார் பெற்ற திருவருளைத் தெரிந்து கொண்டு தேவர்கள் எல்லாரும் பெருகி எழுமாறு ஆகாயத்தில் மகிழ்ச் சியால் ஆரவாரத்தைப் புரிந்து கற்பக மரத்திலிருந்து கொய்து கொண்டு வந்த தேன் நிரம்பிய மலர்களை மாரி யைப் போலச் சொரிந்தார்கள். பாடல் வருமாறு:

" திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச்சாத்தி இருக்குமொழிப் பிள்ளையார் எதிர்தொழுது கின்றருள அருட்கருணைத் திருவாள னார்.அருள்கண்

டமரரெலாம் பெருக்கவிசும் பினில் ஆர்த்துப் பிரசமலர் -

மழைபொழிந்தார்.'