பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& பெரிய புராண விளக்கம்-10

உளம்-தங்களுடைய திருவுள்ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். கொள்-முறையாக அத்தியயனம் செய்து கற்றுக் கொள்ளும். மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களை யும் கற்றுத் தேர்ச்சி பெற்ற ஒருமை பன்மை மயக்கம். வேதியர்தம்-அந்தணர்கள் புரியும்; ஒருமை பன்மை மயக் கம். தம்: அசைதிலை. ஒம-ஹோமங்களில் எழும்; ஒருமை பன்மை மயக்கம். தூமத்து-புகையினால், இரவும்-இராத்திரி வேளையும். கிளர்ந்த-கிளர்ச்சியை அடைந்து தங்களுடைய திருமேனிகளின் மேல் பூசிக்கொண்ட நீற்று-விபூதியினுடைய ஒளியில்-பிரகாசத்தால்: உருபு மயக்கம். செழுமிய-பொருந் திய நண்பகலும்-நடுப்பகல் வேளையும். மலர்ந்து-மலர்ச் சியை அடைந்து. அளந்து அறியா-அளந்து பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாத, ப்:சந்தி. பல்லூழி.பல ஊழிக் காலங்களில்: ஒருமை பன்மை மயக்கம். ஆந்றுதலால்செய்வதால். அகலிடத்து-இந்த அகலமாகிய நிலவுலகத்தில். விளங்கிய-புகழோடு திகழ்ந்த அம்மூதார்க்கு-அந்தப் பழைய ஊராகிய சீகாழிக்கு. வேறு-இவற்றைத் தவிர வேறாக உள்ள. இரவும்-இரவு வேளையும். பகலும்-பகல் நேரமும். மிகை-வேண்டாத மிகையானவை.

அடுத்து வரும் 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

விரிந்துள்ள சம்பா நெற்பயிர்களும், குறுவை நெற்பயிர் களும், மணக்கத்தை நெற்பயிர்களும், வேறு பல பயிர்களும் விளைந்து நிற்கும் வயல்களில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்களாகும் பொங்கி எழும் நெருப்பில் வயல்களினுடைய வரப்புக்களில் வளர்ந்து நிற்கும் தேமா மரங்களில் பழுத் திருக்கும் பழங்கள் முதிர்ச்சியைப் பெற்றிருப்பதனால் வழியும் தேனாகிய நறுமணம் வீசும் புத்துருக்கு நெய்யை இடையீடு இல்லாமல் எப்பொழுதும் நீளமான அந்த மாமரங் களில் உள்ள இலைகளினுடைய நுனிகளின் வழியினால் ஒழுகி விழுவதனால் நீண்ட காலமாக அந்தச் சிவத்தலமாகிய சீகாழியில் வளர்ந்து நிற்கும் மாமரங்களும் ஆகுதியைப்