பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பெரிய புராண விளக்கம்-10

மார்பில் மின்னென ஒடுங்கி.", வெண்முகிற் பிறழும் மின்னென நுடங்கி.', மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின் .', மின்னேர் சாயலை மேயநம் பெருமகற்கு.' (பெருங்கதை) என்று கொங்குவேளிரும், மின்னொழுகு சாயல் மிகு பூப்பதுமை.', மின்னுக் கொடிப்பல நுடங்கி பாங்குத் தோழியர் குழாத்துள் நிற்ப.',மின்னுமிழ்ந்துலா மேணி.' (சீவக.கிந்தாமணி, 44, 562, 2449) என்று திருத்தக்க தேவரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 97-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அந்தச் சிகாழி மாநகரத்தில் வாழும் மக்கள் மங்கல வாத்தியங்களை வாசிப்பார்கள் : சாமவேதத்தைக் கானம் புரிவார்கள் வீதிகளில் உள்ள தங்களுடைய திருமாளிகை களில் இருக்கும் திண்ணைகளினுடைய பக்கங்களில் ஒளி பொங்கி எழும் மாணிக்கத்தைப் பதித்திருக்கும் திருவிளக்குக் களை ஏற்றி வைத்துப் பூரண கும் பங்களையும் வரிசை வரிசையாக வைப்பார்கள்; திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வாழ்த்து வார்கள்; அந்தச் சீகாழியில் அந்த மக்களுடைய திருவுள்ளங்களில் பொங்கி எழுந்த வியப் புணர்ச்சியும், பெருமையைப் பெற்று விளங்கும் விருப்பமும், பக்தியும் பொங்கி எழத் தாங்கள் தங்கி வாழும் அழகு மிகுதியாக அமைந்த தெருக்களைப் பெற்ற சண்பை நகர மாகிய சீகாழி என்னும் பெரிய சிவத்தலத்தை வலமாக வந்து அடையும் சமயத்தில். பாடல் வருமாறு:

மங்கலது ரியம்துவைப்பார்; மறைச்சாமம்

பாடுவார்; மருங்கு வேதிப்

பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும் பமும் கிரைப்பார்: போற்றி செய்வார்;

அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும்

பெருவிருப்பும் அன்பும் பொங்கத்

தங்குதிரு மலிவீதிச் சண்பைங்கர்

வலம் செய்துசாரும் காலை,'