பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 147

இந்தப் பாடல் குளகம். மங்கலதுாரியம்-அந்தச் சீகாழி மாநகரத்தில் வாழும் மக்கள் மங்கல வாத்தியங்களை: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: நாகசுரம், ஒத்து, மத்தளம்,கஞ்சதாளங்கள்,முகவீணை, வீணை, யாழ்,சல்லரி, கரடிகை,முரசு, பேரிகை தப்பட்டை, சங்க வாத்தியம் முதலியவை. துவைப்பார்-வாசிப்பார்கள்: ஒருமை பன்மை மயக்கம். மறைச்சாமம்-சாமவேதத்தை பாடுவார்-அந் தணர்கள் கானம் செய்வார்கள்; ஒருமை பன்மை மயக்கம். மருங்குவேதி-திருவிதிகளில் உள்ள தங்களுடைய திருமாளி கைகளில் இருக்கும் திண்ணைகளினுடைய பக்கங்களில்: ஒருமை பன்மை மயக்கம். போங்கு-ஒளி பொங்கி எழும். ரி-மாணிக்கத்தைப் பதித்திருக்கும். வி ள க் கு-திரு விளக்குக்களை : ஒருமை பன்மை மயக்கம். எடுத்து-ஏற்றி ஒவத்து. ப் : சந்தி, பூரண கும்பமும்-பூரண கும்பங் களையும்; ஒருமை பன்மை மயக்கம். திரைப்பார்-வரிசை யாக வைப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பூரண கும்பம்-தூய நீரை நிரப்பிய குடம். போற்றி செய்வார். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வாழ்த்துவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அங்கு-அந்தச் சீகாழியில். அவர் கள்-அந்த மக்கள். மனத்து-தங்களுடைய திருவுள்ளங்களில், ஒருமை பன்மை மயக்கம். எழுந்த-எழுந்து தோன்றிய. அதிசயமும்-வியப்புணர்ச்சியும். பெரு-பெருமையைப் பெற்று விளங்கும். விருப்பும்-விருப்பமும் அ ன் பு ம்-பக்தியும். பொங்க-பொங்கி எழ. த் : சந்தி. தங்கு-தாங்கள் தங்கிக் கொண்டு வாழும். திரு-அழகு; செல்வர்கள் எனலும் ஆம்: இனை மயக்கம். மவி-மிகுதியாக அமைந்த, வீதி-திருவீதி களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். ச் : சந்தி. சண்டைசன்பையாகிய சீகாழி என்னும். நகர்-பெரிய சிவத்தலத்தை வலம் செய்து-வலமாக வந்து. சாரும்தங்களுடைய திருமாளிகைகளை அடையும். காலைசமயத்தில். -

பிறகு உள்ள 98-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: