பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பெரிய புராண விளக்கம்-20

'சீகாழியில் உள்ள பிரமபுரீசர் ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையில் விளங்கும் அழகைப் பெற்ற தங்கத்தைப் பதித்திருக்கும் தோணியின் மேல் வீற்றிருந்த தலைவனாகிய தோனியப்பனோடு வீற்றிருந்த அவனுடைய தர்மபத்தினி யாராக விளங்கும் பசுமையான தங்கத்தால் செய்த கை வளைகளை அணிந்து கொண்டிருக்கும் பெரிய நாயகியா ரும் தம்முடைய அழகிய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து. வழங்கியருளிய பாலினுடைய மணம் போகாத இனிய வார்த்தைகளை அருளிச் செய்யும் பவளங்களைப் போன்ற அதரங்களைப் பெற்ற திருவாயை உடையவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருமாளி கையில் எழுந்தருளி நுழையும் சமயத்தில், சங்கவாத்தியங், களினுடைய இனிய ஒலியும், ஆகாய துந்துபிகள் முதலாக உள்ள் அளவு இல்லாத் பெருகி எழும் இனிய ஓசை தழைத்து விளங்குமாறு தம்முடைய திருமாளிகையை அடைந்து, அதற்குள் நுழைந்தார். பாடல் வருமாறு: -

  • தம்திருமா எளிகையின்கண் எழுந்தருளிப் புகும்பொழு துசங்க காதம் அந்தரதுங் துபிமுதலா அளவில்பெரு

கொலிதழைப்ப அணைந்து புக்கார் சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரா

னுடன்அமர்ந்த துணைவி யாகும் பைக்தொடியாள் திருமுலையின் பாலறா மதுரமொழிப் பவள வாயார்." இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. சுந்தர-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் விளங்கும். அழகைப் பெற்ற, ப், சந்தி. பொன்-தங்கத்தைப் பதித்திருக் கும். தோணிமிசை-தோணியின் மேல். இருந்த-iற்றிருந் தருளிய. பிரானுடன்-தலைவனாகிய தோணியப்பனோடு. அமர்ந்த-எழுந்தருளியிருந்த துணைவி-அவனுடைய தர்ம