பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置5& பெரிய புராண விளக்கம்-10

க்சந்தி. கலை-கலைகளினுடைய தன்மை அமைந்த ஒருமை பன்மை மயக்கம். அந்தக் கலைகள் அறுபத்து நான்கு. 'ஆய கலைகள் அறுபத்து நான் கினையும்' என வருதல் காண்க. அவை இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. 'ப்:சந்தி. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. கவுணியர்-சீகாழியில் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த அந்தணர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். கோன்அரசராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பாடும்-பாடியருளும். கா ைல - சமயத்தில். இ ந் த ப் டாடலில் குறிப்பிட்ட பாசுரம் தக்கராகப் பண் அமைந்தது. அது வருமாறு:

' மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கிளி உடையும கொண்ட உருவம் என்கொலோ.'

p

பின்பு உள்ள 13- ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம் முடைய கைகளால் வரையறையாகத் தாளத்தைத் தட்டிக் கொண்டு சத்தபுரீசரைப் பாடியருளியவுடன், அதனைப் பார்த்தருளித் தம்முடைய கருணையை மிகுதியாக வழங்கி வருளிய சிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற மகாதேவராகிய சத்தபுரீசருக்கு உரிய ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட் சரத்தை வரைந்திருக்கும் நல்ல சிவந்த தங்கத்தால் செய்யப் பெற்ற ஒரு தாளம் ஐயராகிய அந்தச் சத்தபுரீசர் வழங்கிய திருவருளால் அந்த நாயனார் பாடத் தொடங்கிய பாசுரத் தோடு பொருந்திய அளவோடு தட்ட இந்தப் பூ மண்டலத் தில் வாழும் மக்கள் எல்லாரும் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் சீகாழியில் திருவவதாரம் செய்தருளி வரும் வேதியச் சிறுவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரு டைய திருக்கைகளாகிய இடத்தில் வந்து சேர்ந்தது.' பாடல் வருமாறு: -