பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பெரிய புராண விளக்கம்-10

தோள்களின் மேல் எடுத்துச் சுமந்து கொண்டு செல்வி அந்த இடத்தில் அந்தச் சிவபாதி இருதயராகிய தம்முடைய தந்தையாரின் தோள்களின் மேல் எழுந்தருளித் தம்மை அடைந்த பக்தர்களை வலமாக வந்து தேவர்கள் துதிக்கும் சந்திரனை அணிந்த மானிக்கங்களைப் பதித்திருக்கும் மாடங்கள் உயரமாக நிற்கும் அழகிய தோணிபுரமாகிய சீகாழியில் உள்ள பிரமபுரீசர் ஆலயத்தில் இருக்கும் கட்டு மல்ையின் மேல் விளங்கும் தோணி அமைந்திருக்கும் மு: யைப் பெற்ற திருக்கோயிலுக்குள். பாடல் வருமாறு:

செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத் துடன்கடந்து செல்லும் போது தங்கள் குலத் தாதையார் தரியாது

தோளின்மேல் தரித்துக் கொள்ள அங்கவர்தம் தோளின்மிசை எழுந்தருளி

அணைந்தார் சூழ்ந் தமரர் ஏத்தும் திங்கள்அணி மணிமாடத் திருத்தோணி

புரத்தோணிச் சிகரக் கோவில்.’

இந்தப் பாடல் குளகம். செங்கமல மலர்க் கரத்துக அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய செந்தாமரை மலர்களைப் போன்ற கைகளில், மலர்: ஒருமை பன்மை மயக்கம். கரத்து: ஒருமை பனமை மயக்கம். த் சந்தி. திரு.அழகிய த்: சந்தி. தாளத்துடன்-தமக்குச் சத்தபுரீசர் வழங்கியருளிய தங்கத் தாளத்தோடு..நடந்துதம்முடைய கால்களால் நடந்து. செல்லும்-எழுந்தருளும், போது-சமயத்தில், தங்கள்-தங்களுடைய என்றது திருஞான சம்பந்தரையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. குல-குடும்பத்தில் உள்ள, த், சந்தி. தாதையார்-தம்முடைய தந்தையாராகிய சிவபாத இருதயர். தரியாது-தம்முடைய புதல்வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம் முடைய திருவடிகளால் நடந்து செல்லுவதைச் சகிக்காமல். தோளின்மேல்-தம்முடைய தோள்களின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். தரித்துக் கொள்ள-எடுத்துச் சுமந்து