பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 16?

வாழ்த்திவிட்டு. பூவார் கொன்றை-பூவார்கொன்றை'என் னும் தொடக்கத்தைக் கொண்ட ஒரு திருப்பதிகத்தை. எடுத்தருளினார்-பாடத் தொடங்கியருளினார்.

அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தக்க ராகப் பண்ணில் பாடியருளிய பாசுரம் வருமாறு:

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீச காவாய் என நின் றேத்தும் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போவாம் பாவார் இன்சொற் பயிலும் பரமரே." இந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு:

சாரார் வயல்சூழ் காழிக்கோன் தன்னைச்

சீரார் ஞான சம்பந்தன் சொன்ன பாரார் புகழப் பாட வல்லவர் ஏரார் வானத் திணிதாய் இருப்பரே...' அடுத்து வரும் 108-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "ஒரு குறைவும் இல்லாமல் நிறைந்த சிவஞானத்தைப் பெற்று விளங்கும் மேகத்தைப் போன்றவராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் பாடத் தொடங் கிய திருப்பதிகத்தில் தக்கராகப் பன்ணைத் தம்முடைய கைகளில் வைத்திருந்த அழகிய தங்கத்தாளத்தினால் பொருந்துமாறு தட்டி அடுத்தபடி உள்ள செய்யுள் நடை அமையப் பாடியருளி பேராவல் உண்டாக அந்தத் தோணி யப்பரைப் பணிந்துவிட்டு அப்பால் எழுந்தருளி அலைகள் வீசும் புனல் ஓடும் பொன்னைக் கொழிக்கும் காவிரியாறு பாய்ந்து சேரும் வயல்களைப் பெற்று விளங்கும் பூந்தராய் ஆகிய சீகாழியில் வாழும் பக்தர்கள் நல்ல வாழ்வைப் பெற்றுத் திகழ இளமையை மிகுதியாகப் பெற்றத் திருக் கோலத்தோடு அந்த நாயனார் தம்முடைய காட்சியை வழங்கியருளிச் சீகாழியில் தங்கிக் கொண்டிருந்தார். பாடல் வருமாறு: