பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 17:

களால் எல்லாத் திசைகளிலும் உள்ள உயரமான மாடங். களைப் பெற்ற சிவத்தலங்களினுடைய பக்கங்களில் வாழும் இருபிறப்பாளர் என்னும் துவிஜர்களாகிய அந்தணர்

களும், மற்றச் சாதி மக்களும், மகிழ்ச்சி பொங்கி எழும் பிரம

புரீசருடைய திருத்தொண்டர்களும் வியப்பை அடைந்து

கூட்டமாகக் கூடிக்கொண்டு புகலியாகிய சீகாழியில் வாழும்

அந்தணர்களுடைய ஆண் சிங்கக் குட்டியைப் போன்ற

வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் வந்து

சேர்ந்து அந்த நாயனாருடைய வெற்றிக் கழலைப் பூண்டு

கொண்டு விளங்கும் திருவடிகளை வணங்கும் சிறப்பில்

மிகுதியாக விளங்கினார்கள். பாடல் வருமாறு:

மங்கலமா மெய்ஞ்ஞானம் மண்களிப்புப்

பெற்றபெரு வார்த்தை யாலே எங்கணும்ள்ே பதிமருங்கில் இருபிறப்பா னரும்.அல்லா ஏனை யோரும் பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக்

குழாம்கொண்டு புகலி யார்தம் சிங்க இள ஏற்றின்பால் வந்தணைந்து

கழல்பணியும் சிறப்பின் மிக்கார்.' மங்கல மா-மங்கலகரமாகிய, மெய்-உண்மையாகிய, ஞ்: சந்தி. ஞானம்-சிவஞானத்தை ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துக் குழைத்துப் பெரிய நாயகியார் வழங்கிய பாலை. மண்-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்; இடஆகு பெயர். களிப்ப-களிப்பை யடையுமாறு. பெற்ற-பெற்றுக் குடித்தருளிய. பெரு-பெருமையைப் பெற்று விளக்கும். வார்த்தையால்-மொழிகளால்: ஒருமை பன்மை மயக்கம் ஏ: அசைநிலை. எங்கணும்-எந்தத் திசைகளிலும்; ஒருமை பன்மை மயக்கம். நீள்-உயரமான மாடங்களைப் பெற்ற. பதி-சிவத்தலங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். மருங்கில்-பக்கங்களில் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். இருபிறப்பாளரும்-உபநயனத்திற்கு முன்பு ஒரு பிறப்பையும்.