பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...?? 4 பெரிய புராண விளக்கம்-10

வேளாளர்களுக்கும், பிற சாதிகளில் பிறந்தவர்களுக்கும்: ஒருமை பன்மை மயக்கம். உளோர்: இடைக்குறை. சிந்தைஅவர்களுடைய திருவுள்ளங்கள்: ஒருமை பன்மை மயக்கம். மகிழ்வுற-மகிழ்ச்சியை அடையுமாறு. மலர்ந்து-அந்த நாய னார் தம்முடைய முகம் மலர்ச்சியை அடைந்து. திருவமுது முதலான-திருவமுது முதலாக உள்ள. சிறப்பின்-சிறப்பைப் பெற்ற, செய்கை-செயலை, திருவமுது முதலாக உள்ளவை என்றது உண்ணும் சோற்றையும், வேக வைத்த வாழைக் காய்க்கறி, வெண்டைக்காய்க்கறி, .ெ கா த் த வ ர ங் காய்க்கறி, அவரைக்காய்க்கறி, பறங்கிக்காய்க்கறி, பூசணிக் காய்க்கறி, பொறித்த கூட்டு, தயிர்ப் பச்சடி, பருப்பு உசிவி, மற்றும் பருப்புச் சுண்டல், வேக வைத்த துவரம்பருப்பு, குழம்பு, மோர்க் குழம்பு, ரஸம், வடை, அதிரசம், குஞ்சாலாடு, பதிர்ப்பேணி, ரவாகேசரி, மைசூர்ப்பாகு, பாயசம், தயிர் வடை, தயிர், காய்வகைகள் முதலியவை. தந்தம் அளவினில்-அவர்கள் தங்கள் தங்களுடைய அளவு களுக்கு ஏற்ற வகையில். அளவு: ஒருமை பன்மை மயக்கம். விரும்பும் அவர்கள் விழையும். தகைமையினால்-தகுதியான பான்மையினால். கடன்-தம்முடைய கடமையை. ஆற்றும்புரியும். சண்பை மூதூர்-சண்பையாகிய சீகாழி என்னும் பழமையான சிவத்தலம். எந்தை பிரான்-அடியேங்களுடைய தலைவனாகிய கைலாசபதி. அடியேங்கள்' என்றது சேக் கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. சிவலோகம் என-எழுந்தருளியிருக்கும் சிவலோகம் என்று கூறுமாறு. என: இடைக்குறை. விளங்கி-திகழ்ந்து. எவ்வுலகும்-எந்த உலகங்களில் வாழ்பவர்களும்; இடஆகு பெயர். உலகு: ஒருமை பன்மை மயக்கம். ஏத்தும்-துதித்துப் பாராட்டும்; சீகாழியைத் துதித்துப் பாராட்டும். நாளில்காலத்தில்.

பிறகு வரும் 112-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: "செழிப்பைப் பெற்று விளங்கும் முத்துக்களைத் தன்னு டைய அலைகளால் வாரிக் கரையில் வீசும் பொன்னைக்