பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 179

மூர்த்தி நாயனார் நற்றுணையப்பரை வணங்கிவிட்டு நல்ல சேந்தமிழ் மொழியில் அமைந்த செய்யுட் சொற்களைப் பெற்ற தொடுத்தலைக் கொண்ட மாலையாகிய ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளத் தொடங்கினார். பாடல் :ைஆமாறு:

தேனலரும் கொன்றையினார் திருகன்னி புள்ளியினைச் சாரச் செல்வார் வாண்ணையும் மலர்ச்சோலை தோன்றுவதெப்

பதி' என்ன மகிழ்ச்சி எய்திப் 'பாலைவயல் திருகன்னி பள்ளி' எனத்

தாதையார் பணிப்பக் கேட்டு ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொல் தொடைமாலை கவில லுற்றார்.'

தேன் அலரும்-தேன் ம ல ரு ம். கொன்றையினார். கொன்றை மலர் மாலையை அணிந்து கொண்டிருப்பவராகிய நற்றுணையப்பர். கொன்றை: ஆகு பெயர். திருநனிபள்ளி யினை-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருநனி பள்ளியை னகர ஒற்றுச் செய்யுள் ஓசையை நோக்கி மிக்கது. ச்: சந்தி. சார-அடைவதற்காக ச்: சந்தி. செல்வார்.எழுந் தருள்பவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். வான்-ஆகாயத்தை அணையும்-அளாவும். மலர்-மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச் சந்தி. சோலை-பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழில். .ே த ர ன் று வ து - எ ன க் கு முன்னால் காட்சி அளிப்பது. எப்பதி-எந்தச் சிவத்தலம். என்னஎன்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வினாவி யருள. மகிழ்ச்சி-மகிழ்ச்சியை எய்தி-அடைந்து. ப், சந்தி. பாலை-நீலோற்பல மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வயல்-வயல்களைப் பெற்ற, திருநன்னி பள்ளி-திருநனிபள்ளி. என-என்று; இடைக்குறை, த்: சந்தி. தாதையார்-தம்முடைய தந்தையாராகிய சி. வ பா த இருதயர். பணிப்ப-கூற. க், சந்தி. கேட்டு-அதனைக் கேட்