பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெரிய புராண விளக்கம்-1).

'காரைகள் கூகை முல்லை' என-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் காரைகள் கூகை முல்லை'என்று தொடங்கி, இடைக்குறை, நிகழ்-நடக்கும். கலை-கலைத் தன்மையை. சேர்-சேர்ந்திருக்கும். வாய்மை-உண்மையைப் புலப்படுத்தும், ச்:சந்தி.சீர்-செய்யுட்களுக்கு உரியiசீர்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். இயல்-இயல்பைக் கொண்ட பதிகம்-ஒரு திருப்பதிகத்தை பாடி-பாடியருளி. த்: சந்தி, திருக்கடைக் காப்புத் தன்னில்- அந்தத் திருப்பதிகத் தில் உள்ள இறுதிப் பாசுரமாகிய திருக்கடைக் காப்பில். தன்: அசைநிலை. 'நாரியோர் பாகம் வைகும் நனிபள்ளி உள்குவார் தம் பேரிடர் கெடுதற்கானை நம தெனும் -'நாரியோர் பாகம் வைகும் நனிபள்ளி உள்குவார் தம் பேரிடர் கெடுதற்கானை நமது என்னும். எனும்: இடைக் குறை. பெருமை-பெருமையை. வைத்தார்-வைத்து அந்த நாயனார் பாடியருளினார். -

இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரம் பியந்தைக் காந் தாரப் பண் அமைந்தது. அது வருமாறு:

' காரைகள் கூகை முல்லை களவாகை

ஈகைபடர் தொடரி கள்ளிசலினிச் சூரைகள் பம்மி விம்முகடுகாம மர்ந்தசிவன்

மேல் சோலை நகர்தான் தேரைக ளரை சாயமிதி கொள்ள

வாளை குதிகொள்ள வள்ளை துவன காரைக ளாரல்வாரி வயல் மேதி

வைகும் தனி பள்ளிபோலும் நமர்காள்.' இந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு:

' கடல்வரை ஒதம்மல்கு கழிகானல் பாணல்

கமழ் காழி என்று கருதப் படுபொருள் ஆறும் நாலும் உளதாக

வைத்த பதியான ஞான முனிவன்